தமிழ் சினிமாவை பொருத்தவரையில் நடிப்பு, இசை, பாடகர், இயக்குனர் என பல துறைகளில் சிறப்பாக விளங்கும் கலைஞர்களை பார்ப்பது சற்று அரிதான ஒரு நிகழ்வு தான். அந்த வகையில் மிக முக்கியமான ஒரு கலைஞர் தான் நடிகர் சிம்பு. பிரபல இயக்குனர் டி. ராஜேந்திரன் மகனான இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் முன்னணி நடிகராக அறிமுகமாகி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து வந்த சிம்புவின் திரைப்படத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா, வல்லவன், மன்மதன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் மிக முக்கியமான மைல்கல்லாகவும் இருந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இடத்தை அவர் பிடிப்பார் என கருதப்பட்ட நிலையில் நடுவே சில ஆண்டுகளில் அவரது நடிப்பில் வந்த எந்த திரைப்படங்களும் பெரிதாக பெயர் எடுக்கவில்லை. இதனிடையே தனிப்பட்ட காரணங்களால் நிறைய பிரச்சனைகளையும் சிம்பு சந்தித்து வர திரை துறையிலும் தடுமாற்றம் கண்டிருந்தார்.
வாலு, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், ஈஸ்வரன், வந்தா ராஜாவா தான் வருவேன் உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய அளவில் பெயரை பெற்று கொடுக்காத நிலையில் அச்சம் என்பது மடமையடா, செக்கச் சிவந்த வானம் உள்ளிட்ட திரைப்படங்கள் சிம்புவின் நடிப்பிற்கு அதிக பாராட்டையும் பெற்றுக் கொடுத்திருந்தது.
இப்படி சிம்புவின் பல திரைப்படங்கள் அதிகம் வெற்றிகளை பார்க்காமல் இருந்து வந்த நிலையில் அவரது திரைப்படத்திலேயே கடந்த சில ஆண்டுகளில் திருப்புமுனையை ஏற்படுத்திய இயக்குனர் தான் வெங்கட் பிரபு. ‘மாநாடு’ என டைம் லுக் கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் சிம்பு மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒவ்வொரு காட்சியும் தூள் கிளப்பியதால் பிளாக்பஸ்டர் வெற்றிப் படமாகவும் 2021 ஆம் ஆண்டு மாநாடு அமைந்திருந்தது. இதனால் தொடர்ந்து வெளிவரும் ஒவ்வொரு சிம்புவின் படங்களும் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் அடுத்ததாக தக் லைஃப், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் புதிய திரைப்படம் உள்ளிட்டவற்றிலும் நடித்து வருகிறார்.
இதனிடைய மாநாடு திரைப்படத்தில் வில்லனாக நடித்த எஸ் ஜே சூர்யாவுக்கு பதிலாக யார் நடிக்க இருந்தார்கள் என்பதை பற்றி தற்போது பார்க்கலாம். மாநாடு படத்தில் சிம்புவுக்கு இணையாக நடிப்பிலும், வில்லத்தனத்திலும் மிரட்டி இருப்பார் எஸ் ஜே சூர்யா. அப்படி இருக்கையில் அவருக்கு பதிலாக பலரும் இந்த படத்தில் நடிக்கவிருந்தனர்.
மாநாடு படத்தில் வில்லனாக நடிக்க ரவி தேஜா, அர்ஜுன், சுதீப், பசுபதி உள்ளிட்ட பலரிடமும் பேசி உள்ளனர். இதில் பலர் விருப்பப்பட்ட போதிலும், அவர்களுக்கு தேதி இல்லாமல் போனதால் நடிக்க முடியாமலும் போனது. இவர்கள் அனைவரையும் விட அரவிந்த் சாமி தான் மாநாடு படத்தில் நடித்தே தீர வேண்டும் என விரும்பி உள்ளார். ஆனால் அந்த சமயத்தில் தலைவலி படமும் தயாராகி வந்ததால் அவரால் மாநாடு படத்தில் நடிக்க முடியாமல் போனதாக இதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.