இந்தப்படம் அப்படியே என் வாழ்க்கை தான்… படம் பார்த்துட்டு தேம்பி தேம்பி அழுதேன்… சக்தி பி வாசு எமோஷனல்…

By Meena

Published:

சக்தி வாசுதேவன் தமிழ் சினிமாவில் பணியாற்றிய நடிகர் வார். இவர் பிரபல இயக்குனரான பி வாசு அவர்களின் மகன் ஆவார். சின்னத்தம்பி திரைப்படத்தில் சிறிய வயது பிரபுவாக குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சக்தி.

அடுத்ததாக ரிக்ஷா மாமா, செந்தமிழ் பாட்டு, இது நம்ம பூமி ஆகிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் சக்தி. 2007 ஆம் ஆண்டு தொட்டால் பூ மலரும் என்ற திரைப்படத்தின் மூலமாக நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சக்தி.

முதல் படத்தின் மூலமாகவே நல்ல விமர்சனங்களை பெற்று அனைவரின் பாராட்டை பெற்றார் சக்தி. அதற்கு அடுத்ததாக மகேஷ் சரண்யா மற்றும் பலர், நினைத்தாலே இனிக்கும் ஆகிய படங்களில் நடித்தார். ராகவா லாரன்ஸ் நடித்து வெளியான சிவலிங்கா திரைப்படத்திலும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் சக்தி.

பின்னர் விஜய் டிவி நடத்தும் பிக் பாஸ் சீசன் ஒன்றில் போட்டியாளராக கலந்து கொண்டு பல இன்னல்களை சந்தித்த சக்தி அதற்குப் பிறகு சினிமாவில் வராமல் வீட்டிலேயே முடங்கி குடிக்கு அடிமையாகி பல பிரச்சினைகளில் சிக்கியிருந்தார் சக்தி. தற்போது நீண்ட காலத்துக்கு பிறகு ஒரு நேர்காணலில் கலந்து இருக்கிறார். அதில் எமோஷனலாக பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார் சக்தி.

அவர் கூறியது என்னவென்றால் கவின் நடித்த ஸ்டார் திரைப்படம் அப்படியே என் வாழ்க்கை தான். அந்த படத்தை பார்த்து நான் தேம்பி தேம்பி அழுதுட்டேன். அந்த படத்துல ஒரு டயலாக் வரும். நீ கீழவிழுந்த போது தோக்கலை எப்போ நீ உன்ன கண்ணாடியை பார்க்க மறந்தியோ அப்பவே தோத்துட்ட அப்படின்னு வரும். அந்த டயலாக் எனக்கு அப்பவே என் அப்பா எனக்கு சொன்னாரு. நான் பண்ண தப்புல இருந்து எல்லாம் இப்போ மீண்டு கொஞ்சம் கொஞ்சமா வந்துட்டு இருக்கேன் என்று எமோஷனாக பேசியிருக்கிறார் சக்தி.