வெவ்வேறு மொழிகளில் நடிக்கும் பொழுது இதைத்தான் முயற்சி செய்வேன்… விஜய் சேதுபதி கருத்து…

By Meena

Published:

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி என்றாலே எளிமை மற்றும் திறமை. ‘லீ’, ‘நான் மகான் அல்ல’, ‘வெண்ணிலா கபடி குழு’ போன்ற திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்தார். பின்னர் 2010 ஆம் ஆண்டு ‘தென்மேற்கு பருவக்காற்று’ என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார்.

அதற்கு பின்பு ‘பிட்சா’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணும்’, ‘சூது கவ்வும்’ போன்ற அடுத்தடுத்து படங்களில் நடித்திருந்தார். ஹீரோ மட்டுமல்லாமல் வில்லன் கதாபாத்திரங்களிலும் நடிப்பவர் விஜய் சேதுபதி. ஒவ்வொரு படத்திலும் வயதானவர் மற்றும் வித்தியாசமான தோற்றங்களில் தோன்றி அனைவரையும் தனது எதார்த்தமான நடிப்பு திறமையால் கட்டிப்போட்டார்.

விஜய் சேதுபதியின் நடிப்பை போலவே இவரின் மேடைப் பேச்சுகளும் மிக பிரபலம். ஆழமான கருத்துக்கள், பக்குவமான பதில்கள் என இவரது பேச்சை ரசிப்பவர்கள் ஏராளம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே விஜய் சேதுபதியின் சிந்தனையை பற்றி ஆச்சர்யத்துடன் பேசியிருப்பார். அப்படி வாழ்க்கையை பற்றி எளிதான வார்த்தைகளில் கூறிவிடுவார்

வருடத்திற்கு நான்கு மற்றும் ஐந்து படங்கள் என அடுத்தது பிஸியாக நடித்து கொண்டிருப்பவர் விஜய் சேதுபதி. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் விஜய் சேதுபதிக்கு கலாட்டா விருது விழாவில் ‘ப்ரைட் ஆப் இந்தியன் சினிமா’ என்ற விருதினை வழங்கி கௌரவித்துள்ளார்கள்.

விருதினை பெற்ற பின்பு பேசிய விஜய் சேதுபதி, ஒவ்வொரு படத்திலும் எழுத்தாளர் உருவாக்கும் கதாபாத்திரம் தான் நாம். அதை சரியாக உள்வாங்கி கொண்டு நடித்தாலே போதும் அதற்கான ரிசல்ட் கிடைத்துவிடும். மற்ற மொழி படங்களில் நடிக்கும் பொழுது, அங்கு செட்டில் வேலை பார்ப்பவர்கள், மேலும் அந்த ஊரில் இறங்கி பொதுமக்களைப் பார்த்து, அவர்களின் கலாச்சாரத்தை தெரிந்து கொண்டு நல்ல பெர்ஃபாம் பண்ணவே முயற்சி செய்வேன் என்று கூறியுள்ளார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.