வாக்காளர்கள் அவசியம் கேட்க வேண்டிய பாடல் இதுதான்… அட இப்ப நடக்குறதை வாலி அப்பவே சொல்லிட்டாரே…!

By Sankar Velu

Published:

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் தேர்தலில் அரசியல்வாதிகள் வாக்காளர்களை விலை கொடுத்து வாங்கி விடுகிறார்கள். அதன்பிறகு அவர்கள் என்ன கோரிக்கை வைத்தாலும் தொகுதிப் பக்கம் வருவதே இல்லை. ஏன் செய்யவில்லை என்றும் கேட்க முடியவில்லை. ஏன்னா நீ காசு வாங்கிட்டுத் தானே ஓட்டுப் போட்ட… ஏன் கேட்குறேன்னும் கட்சிக்காரர்களே வக்காலத்து வாங்கி விடுகிறார்கள்.

இப்படி இருந்தால் எப்படி ஜனநாயகம் உருப்படும்? இதை மக்கள் மத்தியில் எவ்வளவு தான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அதை இந்தக் காதில் வாங்கி விட்டு அந்தக் காதில் விட்டு விடுகிறார்கள். இந்தப் பாடல் அவர்களுக்கு கொஞ்சமாவது விழிப்புணர்வு ஏற்படுத்தினால் நல்லது.

தேர்தல் வந்தால் பலருக்கும் கொண்டாட்டம். இது ஜனநாயகக் கடமை. கள்ள ஓட்டு, இறந்தவர்களுக்கும் ஓட்டு என பல விஷயங்கள் இந்த தேர்தல் காலங்களில் அரங்கேறி வருகிறது. இந்த தில்லுமுல்லுகளை எல்லாம் கவிஞர் வாலி அப்போதே சுட்டிக்காட்டி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

பாருக்குள்ளே நல்ல நாடு என்ற படத்தில் தான் ஓட்டுப்போடுங்க என்ற பாடலை எழுதியுள்ளார். டிம்எஸ் பாடியுள்ளார். எம்எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார்.

கட்சிக்காக, சாதிக்காக, பக்கத்து வீட்டுக்காரன் சொன்னா ஓட்டுப்போடுவான். அழுதா ஓட்டுப் போடுவான். அதுக்காக கவிஞர் வாலி, ஓட்டுப்போடுங்க கொஞ்சம் பார்த்துப் போடுங்க. சிலர் பேச்சைக் கேட்டு போட்ட ஓட்டு நாட்டைக் கெடுக்குங்கன்னு பல்லவியை ஆரம்பிச்சிருப்பாரு.

PNN, Vaali
PNN, Vaali

சேலை வேட்டி தந்து கூட ஓட்டுக் கேட்பாங்க. சிலர் தென்னங்கள்ளு கொடுத்துக்கூட ஓட்டுக்கேட்பாங்க. சாதி பேரை சொல்லித் தள்ளுறத தள்ளி நீதி தேவன் கண்ணைக் கட்டி ஓட்டுக் கேட்பாங்கன்னு சொல்வாரு.

செத்தவனைத் தேர்தலிலே பொழைக்க வைப்பாங்க. இந்த தேசம் விட்டுப் போனவனைத் திரும்ப வைப்பாங்க. சீக்கிரமாகப் போடும் இது யாரும் போடக்கூடும். இதை ஏன் சொன்னாருன்னா குடியரசுத்தலைவர் ஆர்.வெங்கட்ராமன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகியோர் ஓட்டுப் போடச் செல்லும் போது அவர்களது ஓட்டுகளை ஏற்கனவே போட்டாச்சுன்னு சொல்லி அனுப்பினாங்களாம்.

அதற்கு நடிகர் திலகம் சொன்ன விமர்சனம் தான் ஹைலைட். என்னடா இது என்னையவே ஓட்டுப் போட விடமாட்டேங்குறான். என்னையே பெரிய நடிகர்னு சொல்றாங்க. ஆனா எனக்கேத் தெரியாம என்னை மாதிரி வேஷம் போட்டு ஓட்டுப் போட்டுப் போயிருக்கான்னா அவன் தான் பெரிய நடிகர்னு சொன்னாராம்.

மேற்கண்ட தகவலை பிரபல யூடியூபரும், திரை ஆய்வாளருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.