ரசிகர்கள் எதிர்ப்பு… ட்விட்டரை விட்டு ஓடிய விக்னேஷ் சிவன்…

By Meena

Published:

சிறிது காலத்திற்கு முன்பு சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் பேசப்பட்டவர்கள் தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். அதற்கு காரணம் Netflix இல் இவர்களது டாக்குமென்டரி வெளியாக இருந்தது. அதாவது நயன்தாராவும் விக்னேஷ் சிவானும் காதலித்தது முதல் திருமணம் செய்து கொண்டது வரை அவர்களது திருமண ஆல்பம் உள்ளிட்ட பல விஷயங்கள் இந்த டாக்குமெண்டரியில் இருப்பதாக கூறப்பட்டது. இவர்கள் திருமணம் இரண்டு வருடங்களுக்கு முன்பே முடிந்த நிலையில் ஏன் இவ்வளவு தாமதம் ஏன் என்பதற்கு காரணம் தனுஷ் தான் என்ற குற்றச்சாட்டை வைத்திருந்தனர்.

விக்னேஷ் சிவன் இயக்கி அதில் கதாநாயகியாக நடித்தவர் தான் நயன்தாரா. அந்த திரைப்படம் நானும் ரவுடி தான். இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ். தங்களுக்கு காதல் ஏற்பட்ட திரைப்படத்தின் பாடல்களையும் காட்சிகளையும் தங்களது ஆல்பத்தில் பயன்படுத்த என்ஓசி சர்டிபிகேட் கேட்டதாகவும் அதற்கு தனுஷ் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டதாகவும் குற்றச்சாட்டை வைத்திருந்தனர்.

ம்பத்தில் பலர் நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்தாலும் போகப்போக அனைவரும் தனுஷ் பக்கமே சாயத் தொடங்கினர். தனுஷ் எதுவுமே பேசாமல் அவர் பக்கம் மக்களை இழுத்து விட்டார். காரணம் இவர்கள் காசு வாங்கிக்கொண்டு தான் டாக்குமெண்டரியை Netflix இல் கொடுத்திருக்கிறார்கள். அதேபோல தனுஷ் அவரது பொருளுக்கு காசு கேட்பது தவறு இல்லையே என்று பலரும் கூறினார்கள்.

அதனால் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் சமூக வலைத்தளங்கள் முழுவதும் நெகட்டிவிட்டியே பரவியது. இது மட்டுமில்லாமல் பலர் வெளியே வந்து விக்னேஷ் சிவனைப் பற்றி நானும் ரவுடிதான் படசெட்டில் வீணாக பணத்தை செலவழித்தார்கள் போன்ற எதிர் குற்றச்சாட்டுகள் வந்தது.

எத்தனை கேள்விகளையும் எதிர்ப்புகளையும் நெகட்டிவிட்டையும் twitter-யில் ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுமே இவர்களுக்கு எதிராக திரும்பி விட்டனர். இவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாத விக்னேஷ் சிவன், சமீபத்தில் தனது twitter அக்கவுண்டையே க்ளோஸ் செய்து இருக்கிறார். இந்த தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது பேச்சு பொருளாகவும் ஆகிக்கொண்டிருக்கிறது.