பிரகாஷ்ராஜ் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் நடிகர் ஆவார். இவர் குணச்சித்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக பிரபலமானவர். எந்த கதாபாத்திரம் ஆனாலும் தனது அபாரமான நடிப்பால் மக்களைக் கவர்ந்தவர்.
1994 ஆம் ஆண்டு ‘டூயட்’ திரைப்படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 1998 ஆம் ஆண்டு ‘இருவர்’ திரைப்படத்தில் நடித்து சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றார். தொடர்ந்து அன்று முதல் இன்றளவும் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து புகழடைந்தவர் பிரகாஷ்ராஜ்.
நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராக கன்னடத்தில் சில படங்களும் தமிழில் ‘உன் சமையல் அறையில்’ என்று திரைப்படத்தையும் இயக்கினார். மேலும் தயாரிப்பாளராக ‘அழகிய தீயே’, ‘நாம்’, ‘கண்ட நாள் முதல்’, ‘அபியும் நானும்’ போன்ற திரைப்படங்களை தயாரித்து உள்ளார். ‘அபியும் நானும்’ திரைப்படம் தந்தை- மகள் உறவை அழகாக வெளிப்படுத்தி நல்ல விமர்சனங்களைப் பெற்று வெற்றிப் பெற்றது.
பிரகாஷ்ராஜ் 1994 ஆம் ஆண்டு நடிகை லலிதா குமாரியை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். பின்னர் 2009 ஆம் ஆண்டு கருத்து வேறுபாட்டால் 2009 ஆம் ஆண்டு லலிதா குமாரியை விவாகரத்து செய்தார். பின்பு 2010 ஆம் ஆண்டு நடன இயக்குனரான போனி வர்மாவை மறுமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில், தற்போது பிரகாஷ்ராஜ் அவர்களின் முதல் மனைவி லலிதா குமாரி தான் ஏன் மறுமணம் செய்துக் கொள்ள வில்லை என்பதை மனம் விட்டு பகிர்ந்துள்ளார். அவர் கூறியது என்னவென்றால், முதல் திருமண வாழ்க்கையில் நான் உண்மையாக தான் இருந்தேன். அந்த வாழ்க்கையே எனக்கு போதுமானது, இனி எனது மகள்களுக்காக வாழலாம் என்று முடிவு செய்ததால் மறுமணம் செய்வதைப் பற்றி யோசிக்கவில்லை என்று பகிர்ந்துள்ளார் லலிதாகுமாரி.