ஜி.வி..பிரகாஷின் செல்ல மகளின் பெயர் இதுதான்… பிரபல நடிகரின் பதிவு!!

ஜி. வி. பிரகாஷ் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக, அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராகவும் வலம் வருகிறார். இவர் 2006 ஆம் ஆண்டு வெளியான வெயில் திரைப்படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமானார்.…

ஜி. வி. பிரகாஷ் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக, அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராகவும் வலம் வருகிறார். இவர் 2006 ஆம் ஆண்டு வெளியான வெயில் திரைப்படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமானார். கிரீடம், பொல்லாதவன், சேவல், அங்காடித் தெரு, ஆயிரத்தில் ஒருவன் எனத் தொடர்ந்து தனது இசையமைப்பின் மூலம் பிரபலமான இவர் 2015 ஆம் ஆண்டு டார்லிங்க் படத்தில் ஹீரோவானார்.

இவர் நடிப்பில் கடைசியில் வெளிவந்த 100% காதல் மாஸ் ஹிட்டானது, தற்போது கையில் ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், அடங்காதே, ஜெயில், 4 ஜி, காதலைத் தேடி நித்யா நந்தா, காதலிக்க யாருமில்லை, பேச்சுலர் போன்ற படங்கள் உள்ளன. இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது இசையில் அதிக பாடல்களைப் பாடிய சைந்தவியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

e2a0ca755af4a80f8022ebb11da4b5e7

இவர் நடிப்பில் கடைசியில் வெளிவந்த 100% காதல் மாஸ் ஹிட்டானது, தற்போது கையில் ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், அடங்காதே, ஜெயில், 4 ஜி, காதலைத் தேடி நித்யா நந்தா, காதலிக்க யாருமில்லை, பேச்சுலர் போன்ற படங்கள் உள்ளன. இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது இசையில் அதிக பாடல்களைப் பாடிய சைந்தவியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் காம்போவில் வெளிவரும் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு இருக்கும், கடைசியாக சைந்தவி ஜிவி இசையில் எள்ளு வய பூக்கலயே பாடல் பாடி அதற்காக விருதுகளையும் பெற்றார்.

சினிமாவில் முன் மாதிரியான தம்பதிகளுகளான இவர்களுக்கு கடந்த மாதம் அழகான பெண் குழந்தை பிறந்தது. ஜிவி.பிரகாஷ் வலைதளங்களில் பதிவிட திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்துகளைக் கூறினர். மேலும் குழந்தைக்கு என்ன மாதிரியான பெயர் வைக்கலாம் என்பது தொடர்பான ஆலோசனைகளையும் கூறி வந்தனர்.

குழந்தையின் பெயர் குறித்து பலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்க, ஜி.வி.பிரகாஷின் மகள் பெயர் அன்வி என நடிகர் கணேஷ் வெங்கட்ராம் இன்ஸ்டாகிராம் பதிவில் பதிவிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன