என் மனதினை பாதித்தநாள் இதுதான்- ஷெரின்!!

மதிய நேரம் பிக் பாஸ் வீட்டில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. பல்வேறு பத்திரிக்கைகளைச் சார்ந்த சுபா, சுதிர், மீனாட்சி, அனுபமா, விஜய், சந்திரசேகர், பிரியங்கா, அதிதி ஆகியோர் பங்குபெற்றனர். போட்டியாளர்களிடம் ஒவ்வொருவராக கேள்வி…

மதிய நேரம் பிக் பாஸ் வீட்டில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. பல்வேறு பத்திரிக்கைகளைச் சார்ந்த சுபா, சுதிர், மீனாட்சி, அனுபமா, விஜய், சந்திரசேகர், பிரியங்கா, அதிதி ஆகியோர் பங்குபெற்றனர்.

போட்டியாளர்களிடம் ஒவ்வொருவராக கேள்வி கேட்டனர், இந்தவீட்டில் மறக்க முடியாத விஷயங்களைப் பற்றிக் கேட்கையில், ஷெரின் “வனிதாவிற்கும் எனக்கும் சண்டை வந்த அந்த நாளை என்னால் மறக்க முடியாது என்றார். அடுத்து, தர்ஷன் வெளியில் சென்ற அந்த நாளை மறக்கவே முடியாது என்றார்.

9be28515ffffe2bdb083fc506a99ab08

இந்த வீட்டில் இழந்ததைப் பற்றி கேட்கையில், “எதையும் இழக்கவில்லை, எனது வீட்டைதான் இங்கு மிஸ் பண்றேன்.

என் அப்பாவைப் போன்று ஒரு பாடகராக வரவேண்டும் என்பது என்னுடைய ஆசையாகும், நிறைய திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று கூறினார்.

மற்றொரு நிரூபர் படிப்படியாக வளர்ந்து, இறுதியில் முகினுக்கு கோல்டன் டிக்கெட்டை வென்றதற்கான வாழ்த்துகளைத் தெரிவித்தார்.  

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன