ரைசா வில்சன் ஒரு விளம்பர மாடல் ஆவார், இவர் மாடலாக பல ஆண்டுகளாக இருந்தபோதிலும், இவர் விஜய் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட தமிழ் பிக் பாஸில் கலந்து கொண்டதன் மூலமே ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
சினிமாவைப் பொறுத்தவரை வேலையில்லாப் பட்டதாரி 2 வில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்து இருந்த இவருக்கு அதன்பின்னர் பியார் பிரேமா காதல் என்னும் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதன்பின்னர் இவர் நடித்த தனுசு ராசி நேயர்களே திரைப்படமும் ஹிட் ஆகின. தற்போது ஆலிஸ், காதலிக்க யாருமில்லை, எஃஃப்.ஐ.ஆர், ஹேஸ்டேக் லவ் போன்ற படங்களில் நடித்து பிசியாக வருகிறார்.
தற்போது ஊரடங்கினால் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் இவர், அவ்வப்போது போட்டோக்களை எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் பல வருடங்களுக்கு முன்னர் எடுத்த தன்னுடைய புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். மேலும் அத்துடன் “இது நான் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?” என்ற கேள்வியையும் கேட்டுள்ளார். சும்மாவே ரசிகர்கள் இவரைக் கிண்டல் செய்வார்கள், இவரே கேள்வி கேட்கிறேன் என்ற பெயரில் மாட்டிக் கொள்ள, ரசிகர்கள் நீங்களா இது? என ஷாக்காக கேட்டும், கிண்டலடித்தும் வருகின்றனர்.