ஸ்வாசிகா தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடிக்கும் நடிகை மற்றும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். இவர் எர்ணாகுளத்தை பூர்வீகமாகக் கொண்டவர். பல மலையாள நிகழ்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர். ஸ்வாசிகாவின் இயற்பெயர் பூஜா விஜய் என்பதாகும்.
2009 ஆம் ஆண்டு சுந்தரபாண்டி இயக்கிய வைகை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஸ்வாசிகா. அடுத்ததாக 2019 இல் ராசு மதுரவனின் கோரிப்பாளையம் திரைப்படத்தில் துணை கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் அவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது. இதில் வரும் ஒரு பாட்டில் அவர் நடிப்பு பாராட்டக் கூடியதாக இருந்தது.
அதற்குப் பிறகு 2012 ஆம் ஆண்டு சாட்டை திரைப்படத்தில் சமுத்திரகனியின் மனைவியாக ஒரு சில காட்சிகளில் நடித்திருப்பார் ஸ்வாசிகா. பின்னர் 2014 ஆம் ஆண்டு அப்புச்சி கிராமம் திரைப்படத்திலும் துணை நடிகையாக நடித்திருப்பார் ஸ்வாசிகா. அதற்குப் பிறகு தமிழ் சினிமாவில் சரிவர வாய்ப்பு கிடைக்காத ஸ்வாசிக்கா மலையாள திரையுலகம் பக்கம் சென்றார்.
தற்போது தமிழில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தற்போது ஹரிஷ் கல்யாண் அட்டகத்தி தினேஷ் நடித்து வெளியாகி இருக்கும் ரப்பர் பந்து திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஸ்வாசிக்கா. இந்த திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக இருக்கும் மற்றும் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார் சு
ஸ்வாசிகா. இந்த படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் எமோஷனலாக பேசியிருக்கிறார் ஸ்வாசிகா.
ஸ்வாசிகா கூறியது என்னவென்றால், நான் முதலில் மிகுந்த கனவோடு தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று 16 வயதில் சென்னைக்கு வந்தேன். ஆனால் அப்போது எனக்கு சரிவர வாய்ப்பு கிடைக்கவில்லை. நானும் என் அம்மாவும் துணிகளை எல்லாம் பேக் செய்து விட்டு மிகவும் டிப்ரசனுடன் சென்னையில் இருந்து கேரளாவுக்கு சென்று விட்டேன். இப்போது மறுபடியும் வந்து இருக்கிறேன். இப்போது எனக்கு கிடைக்கும் பாராட்டுக்கள் எல்லாம் எனக்கு செகண்ட் இன்னிங்ஸ் ஆரம்பம் ஆனது போல் இருக்கிறது என்று எமோஷனாக பேசியிருக்கிறார் ஸ்வாசிகா.