இந்த சாப்பாட்டை கண்டுபிடிச்சதே மதுரைகாரங்க தான்… சசிகுமார் பெருமிதம்…

By Meena

Published:

சசிகுமார் தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். இவர் மதுரையில் பிறந்து வளர்ந்தவர். இவரது படங்கள் என்றாலே குடும்ப பாங்காக கண்ணியமாக இருக்கும். அதனால் குடும்ப ரசிகர்கள் இவருக்கு அதிகமாக உண்டு.

2008 ஆம் ஆண்டு சுப்ரமணியபுரம் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் சசிகுமார். அதே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் நடிகராகவும் ஒரே நேரத்தில் அறிமுகமாகி பிரபலமானார் சசிகுமார். முதல் படமே வெற்றி படமாக அவருக்கு அமைந்தது. இரண்டாவதாக இவர் இயக்கிய ஈசன் திரைப்படம் பேசப்படவில்லை. அதனால் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார் சசிகுமார்.

தன்படி சுந்தரபாண்டியன், வெற்றிவேல், கொடிவீரன், தாரை தப்பட்டை, அயோத்தி, கருடன், நந்தா ஆகிய நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர் சசிகுமார். இவரது படங்களில் குடும்ப செண்டிமெண்ட் அதிகமாக இருக்கும் நண்பர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருக்கும்.

மதுரையில் பிறந்து வளர்ந்த சசிகுமார் சமீபத்தில் ஒரு நேர்காணலில் மதுரையின் உணவு பழக்க வழக்கங்களை பற்றி பேசி இருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால், மதுரக்காரங்கனாலே அசைவம் ரொம்ப விரும்பி சாப்பிடுவோம். எனக்கும் அது ரொம்ப பிடிக்கும். தூங்கா நகரம் அப்படின்னு சொல்றபடி நீங்க 24 மணி நேரத்தில எப்ப வந்தாலும் இங்க உங்களுக்கு வெரைட்டி வெரைட்டியா சாப்பாடு கிடைக்கும்.

அது மட்டும் இல்லாம எல்லாரும் இப்ப விரும்பி சாப்பிடற கறி தோசை மதுரைக்காரங்க கண்டுபுடிச்சது தான். முட்டையும் கறியும் குழப்பி அடிச்சு தோசைல போட்டு சாப்டோம்னா அப்படி இருக்கும். மதுரைல இருக்க மூல முடுக்கு எல்லாம் ஃபேமஸான கடையில் எல்லாம் நாங்க சாப்பிட்டு இருக்கோம். நாங்க போகாத இடம் இல்லை என்று மதுரையைப் பற்றி பெருமிதமாக பேசியிருக்கிறார் சசிகுமார்.