இந்த இயக்குனர் தான் என்னோட இன்ஸ்பிரேஷன்… லோகேஷ் கனகராஜ் பகிர்வு…

By Meena

Published:

கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்ட தமிழ் திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் லோகேஷ் கனகராஜ். வங்கி ஊழியரான லோகேஷ் கனகராஜ் கார்பரேட் குறும்பட போட்டியில் பங்கேற்க குறும்படங்களை இயக்க ஆரம்பித்தார்.

2012 ஆம் ஆண்டு ‘அச்சம் தவிர்’ என்ற குறும்படத்தை இயக்கினார். அந்த குறும்படம் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர் என்ற பரிசை வென்றது. பின்னர் கார்ப்பரேட் போட்டிக்காக 2016 ஆம் ஆண்டு ‘கலாம்’ என்ற குறும்படத்தை இயக்கினார். அவர் எடுத்த குறும்படத்தை பார்த்த அப்போட்டியின் நடுவரான கார்த்திக் சுப்புராஜ், அதனால் ஈர்க்கப்பட்டு லோகேஷ் கனகராஜ் அவர்களை திரையுலகில் மேலும் படம் எடுக்குமாறு ஊக்குவித்தார்.

2017 ஆம் ஆண்டு ஹைப்பர் லிங்க் படமான ‘மாநகரம்’ திரைப்படத்தை இயக்கியதன் வாயிலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 2019 ஆம் ஆண்டு ‘கைதி’ திரைப்படத்தை இயக்கினார். இவ்விரு படங்களும் நல்ல விமர்சங்களைப் பெற்று வெற்றிப் பெற்றது.

தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரை வைத்து ‘மாஸ்டர்’ திரைப்படத்தை இயக்கினார். இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி வணீக ரீதியாகவும் வெற்றிப் பெற்றது. 2021 ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த திரைப்படம் ‘மாஸ்டர்’ ஆகும். பின்னர் 2022 ஆம் ஆண்டு கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோரை வைத்து ‘விக்ரம்’ திரைப்படத்தை இயக்கினார். இப்படமும் வெற்றி அடைந்து லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு நட்சத்திர அந்தஸ்தை கொடுத்தது.

தற்போது, ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட லோகேஷ் கனகராஜ், தான் இயக்குனராக ஆவதற்கான இன்ஸ்பிரேஷன் யார் என்று கூறியுள்ளார். அவர் கூறியது என்னவென்றால், தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் அது இயக்குனர் ஷங்கர் அவர்கள் தான். அவரது கதை, திரைக்கதை எல்லாமே பிரம்மாண்டமாக இருக்கும். எனக்கு சினிமாவில் இன்ஸ்பிரேஷன் ஷங்கர் சார் தான் என்று கூறியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.