நயன்தாராவின் இந்த குணம் செம.. புகழ்ந்த தொகுப்பாளினி டிடி!!

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர், இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் கலக்கி வருகிறார். தென்னிந்திய சினிமாவில் கொடி கட்டிப் பறக்கும் நடிகை நயன்தாரா. அதிக…

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர், இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் கலக்கி வருகிறார்.

தென்னிந்திய சினிமாவில் கொடி கட்டிப் பறக்கும் நடிகை நயன்தாரா. அதிக அளவில் வெற்றிப் படங்களைக் கொடுத்து ஹீரோ அளவுக்கு பேசப்பட்டு வரும் நடிகை இவரே ஆவார்.

விக்னேஷ் சிவன் தயாரிக்கும் நெற்றிக்கண் படத்திலும் ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார்.

97e233aaf2a54abae8dfcf1f32a34c68

மேலும் அதுபோக தெலுங்கில் 3 படங்களும், மலையாளத்தில் 2 படங்களிலும் இணைந்துள்ளதாகத் தெரிகிறது. காத்துவாக்குல ரெண்டு காதல், அண்ணாத்த போன்ற தமிழ்ப் படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்தநிலையில் தொகுப்பாளினி டிடி இன்ஸ்டாகிராம் லைவில் உரையாட, நயன்தாராவின் சிறந்த குணம் குறித்து ரசிகர் கேட்க, டிடி சொன்ன பதிலால் ரசிகர்கள் ஏக போக குஷியில் உள்ளனர்.

அப்படி என்னதான் அந்த பெஸ்ட் குணம்னு கேக்குறீங்களா? அதாவது, “ நயன்தாராவுக்கு யார் மீதாவது கோபம் வந்தால், மனதில் வைத்துக்கொள்ளாமல் அந்த நபரை அழைத்து, தன் மனதில் பட்டதை சொல்லிவிடுவார்” என்று கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன