டான்ஸ்ல இவர அடிச்சிக்க ஆளே இல்லை… கலா மாஸ்டர் பகிர்வு…

கலா இந்திய நடன கலைஞர் ஆவார். இவரை கலா மாஸ்டர் என்று திரையுலகில் அழைப்பார்கள். இவர் தென்னிந்திய அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். கலா ஒரு பயிற்சி பெற்ற நடன கலைஞர்…

Kala

கலா இந்திய நடன கலைஞர் ஆவார். இவரை கலா மாஸ்டர் என்று திரையுலகில் அழைப்பார்கள். இவர் தென்னிந்திய அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். கலா ஒரு பயிற்சி பெற்ற நடன கலைஞர் ஆவார்.

தனது பள்ளியில் படிப்பை பாதியில் நிறுத்திய கலா மாஸ்டர் நடனத்தின் மீது கொண்ட ஆர்வத்தினால் இவரது மைத்துனர் ரகுராம் மாஸ்டரை அணுகினார். அவரின் சிபாரிசு மூலம் திரையுலகில் நுழைந்த கலா மாஸ்டர் 1982 ஆம் ஆண்டு தனது 12ஆவது வயதில் நடன உதவியாளராக பணியாற்ற தொடங்கினார்.

கே பாலச்சந்தர் இயக்கத்தில் கமலஹாசன் மற்றும் ரேவதி நடித்த ‘புன்னகை மன்னன்’ திரைப்படத்தில் பணியாற்ற இவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. பின்னர் மீண்டும் கே பாலச்சந்தர் இயக்கிய ‘புதுப்புது அர்த்தங்கள் திரைப்படத்தில் நடன இயக்குனராக பணிபுரிந்தார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், ஒரியா, பெங்காலி, ஆங்கிலம், இத்தாலியன் மற்றும் ஜப்பானிய மொழிகளில் கிட்டத்தட்ட 4,000 மேற்பட்ட பாடல்களில் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார் கலா மாஸ்டர்.

‘சந்திரமுகி’ திரைப்படத்தில் பணியாற்றதற்காக சிறந்த நடன இயக்குனருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை வென்றார் கலா மாஸ்டர்..பல முன்னணி நடிகர்கள் உடன் பணியாற்றியுள்ள கலா மாஸ்டர் திரையில் மட்டுமல்லாது சின்னத்திரை தொலைக்காட்சி சேனலான கலைஞர் டிவியில் பிரபல ரியாலிட்டி நடன நிகழ்ச்சியான மானாட மயிலாட நிகழ்ச்சி தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை நடுவராக பணியாற்றி பல இளம் நடன கலைஞர்களுக்கு தன்னால் முடிந்தவற்றை கற்பித்து கொண்டு வருகிறார் கலா மாஸ்டர்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட கலா மாஸ்டர், விஜயுடன் படங்களில் பணியாற்றிய அனுபவத்தை பற்றி பகிர்ந்துள்ளார். அவர் கூறியது என்னவென்றால், எல்லா நடிகரும் ஒரு சில ஸ்டெப்ஸ் எல்லாம் போடறதுக்கு ரொம்ப கஷ்டப்படுவாங்க. ஆனா எவ்ளோ கஷ்டமான ஸ்டெப்பா இருந்தாலும் விஜய் ஒரு தடவை பார்த்துவிட்டு அப்படியே பிக்கப் பண்ணி ஆடிடுவாரு. மற்ற நடிகர்கள் ஆடும்போது பேக்ரவுண்ட்ல இருக்கிற கலைஞர்கள் மேல கவனம் போகும். ஆனால் விஜய் நடனம் ஆடினால் மட்டும் அவரை மட்டுமே பார்க்க வைத்து விடுவார். அவருடைய நடனம் அசைவுகள் மூலம் நம்மை கட்டிப்போட்டு விடுவார். டான்ஸ்ல விஜயை அடிச்சுக்க ஆளே கிடையாது. அவ்வளவு அற்புதமான நடன கலைஞர் விஜய் என்று புகழ்ந்து பேசி உள்ளார் கலா மாஸ்டர்.