அந்தக்காலத்தில் நகைச்சுவை நடிகர்கள் செய்யும் காமெடிகள் மாஸாக இருக்கும். அதுல என்ன ஹைலைட்னா அப்பவும் சரி. இப்பவும் சரி. காமெடி பண்றவங்க யாராக இருந்தாலும் அவங்க சிரிக்க மாட்டாங்க. நம்மளைத் தான் சிரிக்க வைப்பாங்க. அவங்க பாடிலாங்குவேஜ், மேனரிசங்கள் தான் மாறும்.
அந்த வகையில் நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசனை யாராலும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது. இவர் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் சேர்ந்து நடித்த தில்லு முல்லு படத்தை இப்போது பார்த்தாலும் நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும்.
தேங்காய் சீனிவாசன் எம்ஜிஆரின் பல படங்களில் நடித்துள்ளார். இவரைப் பற்றிய ஒரு சுவையான தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார். என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா…
நமக்கு நேரும் சில பிரச்சனைகளை வெளியே சொல்லும் போது அதனால கூட நமக்கு பிரச்சனைகள் வந்துவிடும்னு தேங்காய் சீனிவாசன் ஒரு பேட்டியில அழகா சொன்னார். அவருக்கு எந்த மாதிரியான விஷயங்கள் ஏற்பட்டது? அவர் எப்படி பாதிக்கப்பட்டாருன்னு பார்ப்போம்.
தேங்காய் சீனிவாசனைப் பொருத்தவரைக்கும் அவர் நடித்த பல படங்களுக்குத் தயாரிப்பாளர்கள் சரியா அவருக்குப் பணம் கொடுக்கல. அதைப் பற்றி ஒரு பத்திரிகைப் பேட்டியில் புலம்பி இருந்தார்.
‘எனக்கு இத்தனை தயாரிப்பாளர்கள் பணம் சரியா தரல. எனக்கு வர வேண்டிய தொகை இவ்வளவு’ன்னு சொல்லி இருந்தார். மக்களுக்கு நம் மேல ஒரு அனுதாபம் பிறக்கும் என்ற எண்ணத்திலே தேங்காய் சீனிவாசன் அளித்திருந்த பேட்டி அது. ஆனால் அந்த சம்பவம் எப்படி அவருக்கு எதிர்வினை ஆற்றியது என்பதையும் அவரே அடுத்த ஒரு பேட்டியில் பதிவு செய்து இருக்கிறார்.
‘அந்தப் பேட்டியை நான் கொடுத்ததுக்கு முக்கியமான காரணம் இனிமேலாவது தயாரிப்பாளர்கள் ஒழுங்காகப் பணம் கொடுப்பாங்கன்னு தான்.
ஆனால் பல தயாரிப்பாளர்கள் நான் பணத்தால் ஏமாற்றப்பட்டு இருக்கேன்னு தெரிஞ்ச உடனே இவருக்குப் பணம் கொடுக்காம ஏமாற்றலாம் போல இருக்குன்னு தெரிந்து கொண்டு அதுக்குப் பின்னால எனக்கு நாமம் போட்டுட்டாங்க. அந்தத் தயாரிப்பாளர்களின் எண்ணிக்கை தான் அதிகம்’ என்று அந்தப் பேட்டியில் குமுறி இருக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
படத்தில் தான் இவர்கள் காமெடி நடிகர்கள். ஆனால் நிஜ வாழ்க்கையில் எத்தனை சோகங்கள் அவர்களுக்குள் புதைந்து கிடக்கிறது என்பதற்கு தேங்காய் சீனிவாசன் ஒருவரே சாட்சி.