போக்கிரி படத்தில் வசனம் எழுதியவர் கலைமாமணி வி.பிரபாகர். இவர் விஜய் உடன் பணிபுரிந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார். என்ன சொல்கிறார்னு பார்ப்போமா…
விஜய் கூட போக்கிரி படத்தில் பணியாற்றினேன். அந்தப் படத்தில் தான் முதன் முதலாக சந்தித்தேன். அதுக்கு முன்னாடி எஸ்ஏசி. சார் நல்ல பழக்கம். சித்திக் சார் எஸ்ஏசி சார்கிட்ட அறிமுகப்படுத்தினார். கன்னியாகுமரில ஒரு வேலையாஇருக்கும்போது வெங்கடேஷ் எனக்கு பகவதி படத்துல எழுத கூப்பிட்டாங்க.
அதுக்கு அப்புறம் குத்து படத்தில் எழுதினேன். ஆனால் பகவதி படத்தில் எழுத முடியாத சூழல் இருந்தது. விஜய் சாரோட ஆதி படத்துக்கு எழுத எஸ்ஏசி சார் கூப்பிடறாங்க. அப்போதும் நான் ஜதராபாத்தில் இருந்ததால் எழுத முடியவில்லை. டப்பிங் ஒர்க் நடந்தா அது முடிகிற வரை என்னால் வர முடியாது. அடுத்த வாய்ப்பு போக்கிரி.
பிரபுதேவா சார் டைரக்டா வந்து கூப்பிட்டாரு. அதுக்காக பிரபுதேவா சாருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் இணையாகாது. அதுக்கு முன்னாடி பெரிய பெரிய ரைட்டர்ஸ்கிட்ட எல்லாம் கேட்டாங்க. ஆனா பிரபுதேவா சார் என் பேரைத் தான் சொன்னாரு. அதே நேரத்தில் எஸ்.ஜே.சூர்யா சாரும் எனக்காக ரெக்கமண்ட் பண்ணினாரு.
அந்தளவுக்கு ஒரு நட்பு நெருக்கம் எல்லாருக்கிட்டயும் இருந்தது. விஜய் சார் கூட ஒர்க் பண்ணும்போது அவர் முதல்ல ஸ்கிரிப்ட் கேட்டுருவாரு. அப்போ எதாவது சின்ன டவுட் இருந்தாலும் சொல்லிடுவாரு. முதல் நாளில் டைரக்டர் ஆக்ஷன்னு சொல்லிட்டாருன்னா அவர் எதுவுமே கேட்க மாட்டாரு. ஸ்கிரிப்ட் டிஸ்டர்ப் ஆகவே ஆகாது.
அதுல ரொம்ப தெளிவா இருப்பாரு. அது ரொம்ப பிடிச்ச விஷயம். ரொம்ப ஜாலியா இருப்பாரு. குழந்தை மாதிரி இருப்பாரு. நட்பு, இணக்கம்னு இருப்பாரு. அண்ணேன்னு கூப்பிட்டாலே அவ்வளவு பாசமா இருக்கும். சூட்டிங் ஸ்பாட்ல உள்ள விஜய் சார் அப்படியே மாறி இருப்பாரு. என்ன வேணாலும் கமெண்ட் பண்ணலாம்.
அங்க ஒரு பொக்கே இருந்ததுன்னா நான் இதுக்குள்ள எதுவும் ஹிஸ்டரி இருக்கான்னு கேட்பேன். ஜாக்கிரபி கூட இருக்குன்னு சொல்வாரு. நம்ம வேலையை கிளீனா பண்ணுவாரு. அதுல பர்பக்டா இருப்பாரு. ரொம்ப நுணுக்கமா வேலை செய்வாரு. டைரக்டர் கூட டிஸ்கஸ் பண்ணினாருன்னா யாருக்கும் தெரியாது. யாருடைய மனசும் நோகாம அழகா வேலை செய்வாரு. அந்தப் படத்துல ஆக்டர், கதாநாயகனைத் தாண்டி அவரை நான் ஒரு லீடரா பார்த்தேன்.
எனக்கு அது தோணுச்சு. அவருக்கு இருக்கக்கூடிய ஃபாலோயர்ஸ பார்க்குறது தெரிஞ்சது. நான் சின்ன வயசுல இருந்தே பொலிடிகல் ஃபாலோவிங் ரொம்ப அதிகம். அதுக்குத் தான் ஒரு டயலாக். நான் ‘ஒருவாட்டி முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்’ங்கறது அதுல வந்த டயலாக் தான். தீர்மானிப்பவன் லீடர்.
அதனால் தான் விஜய்க்கு அந்த டயலாக் வச்சேன். அந்த வசனத்தை ரொம்ப விஜய் ரசித்தார். இதுக்குக் காரணம் பிரபுதேவா அவர் அதை அழகா டெலிவரி பண்ணுவார். வடிவேலுவுக்கே அவர் தான் சொல்லிக் கொடுத்தார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.