நேபாளத்துக்கு அருகே உள்ள பிரக்யோதிஷ்பூர் என்ற பூமியின் மன்னராக இருந்தவர் தான் நரகாசுரன் என்பவர். நரகாசுரன் பூதேவியின் மகன். பிரம்மனிடம் இருந்து வரம் பெருவதற்காக கடும் தவத்தினை மேற்கொண்டார் நரகாசுரன். அது எப்படிபட்ட வரம் என்றால் அவனது தாயார் கையால்தான் எனக்கு மரணம் இழக்க வேண்டும் வேறு யாரும் தன்னை அழிக்க முடியாது என்பதுதான் அந்த வரம்.
நரகாசுரனின் கடும் தவத்தினை பார்த்து பிரம்மனும் அந்த வரத்தினை கொடுத்தான். அந்த வரத்தை பெற்றதும் அவனது அட்டகாசம் தொடங்கியது. கடவுளுகே அம்மா என்று அனைவராலும் கூறப்படுபவர் அதிதி. அவர்களின் காது வளையங்களினை திருடியவன் நரகாசுரன்.
கடவுளர்கள் பலரது மகள்களை கடத்தி தனது அந்தப்புரத்தில் இருக்கின்ற சிறையில் அடைத்துவைத்தான் நரகாசுரன். கடவுளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்களது பிரச்சனையை கிருஷ்ணனிடம் கூறினார்கள். நரகாசுரனிடமிருந்து அவர்களையும் அவரது நாட்டு மக்கள் அனைவருக்கும் விடுதலை பெற்று தருமாறு கேட்டனர்.
கிருஷ்ணன் தனது மனைவியான சத்யபாமாவை அழைத்துச் சென்றார். சத்யபாமா பூதேவியின் மறு உருவம். நரகாசுரனுக்கும் கிருஷ்ணனுக்கும் இடையே கடும் சண்டை நிலவியது. நரகாசுரன் விட்ட அம்பு பட்டு கிருஷ்ணன் மயக்கமடைந்தான். அதனை தொடர்ந்து சத்யபாமா வில் எடுத்து குறி வைத்து நரகாசுரன் மேல் விட்ட அம்பு பட்டு அவன் உயிரிழந்தான்.
நரகாசுரனை அதிகாலையில் வதம் செய்ததால் கிருஷ்ண பகவான் எண்ணெய் தேய்த்து தலை மூழ்கினார். அதனால் தான் அனைவரும் தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பது வழக்கமான் ஒன்றாக இருக்கிறது.