பாரதிராஜா இயக்கத்தில் ஒரே ஒரு படம் நடித்த குஷ்பு .. லாஜிக் இல்லாமல் போன கேப்டன் மகள்..!!

By Bala Siva

Published:

தர்மத்தின் தலைவன் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகிய நடிகை குஷ்பு பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், கார்த்திக், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் உள்பட பல முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இருப்பினும் தமிழ் திரை உலகின் ஜாம்பவான் இயக்குனரான பாரதிராஜா இயக்கத்தில் குஷ்பு ஒரே ஒரு படத்தில்  தான் நடித்துள்ளார். அந்த படம் தான் கடந்த 1993ஆம் ஆண்டு வெளியான கேப்டன் மகள்.

பாரதிராஜா இயக்கத்தில் உருவான கேப்டன் மகள் என்ற திரைப்படத்தில் தான் குஷ்பு முக்கிய வேடத்தில் அதாவது அதிரடி ஆக்சன் ஹீரோயினியாக நடித்திருப்பார். இந்த படத்தின் கதைப்படி குஷ்பு மற்றும் ராஜா தம்பதியினர் ஒரு அடர்த்தியான வனப்பிரதேசத்திற்கு புதுமண தம்பதிகளாக வருவார்கள்.

9 நாட்களில் எடுத்து முடிங்க… ரஜினி போட்டோ கண்டிஷன்… எந்த படம் தெரியுமா..?

அங்கு ஒரு வீட்டில் தங்கியிருக்கும் நிலையில் தான் இன்னொரு வீட்டில் ஒரு கும்பல் தங்கி இருக்கும். அந்த கும்பல் பிரதமரை கொலை செய்ய திட்டமிடுவது ராஜா, குஷ்புவுக்கு தெரியவரும். அதன் பிறகு ராஜா மற்றும் குஷ்பு ஆகிய இருவரும் பயங்கர ரிஸ்க் எடுத்து பிரதமரின் உயிரை காப்பாற்றுவார்கள்.

ஆனால் அவர்கள் தான் பிரதமர் உயிரை காப்பாற்றினார்கள் என்றும் இப்படி ஒரு கொலை முயற்சி நடந்தது என்றும் யாருக்கும் தெரியாது. இப்படி ஒரு கதையைத்தான் பாரதிராஜா இயக்கியிருந்தார்.

images 60

ஜாக்கிசான், கமல்ஹாசனுடன் நடித்த நடிகை.. சொந்தமாக உழைத்து 100 கோடிக்கும் மேல் சம்பாதித்தவர்..!

பொதுவாக காதல் கதையம்சம் கொண்ட படங்களை மட்டுமே இயக்கிய பாரதிராஜா வித்தியாசமான ஒரு ஆக்சன் கேப்டன் மகள் திரைப்படத்தை இயக்கி இருந்தார். அதுவும் குஷ்புவை ஆக்சன் ஹீரோயினியாக நடிக்க வைத்திருந்தார்.

இந்த படத்தில் நெப்போலியன், லிவிங்ஸ்டன், ஜி எம் குமார், ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தது.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஹம்சலேகா இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று என்ற பாடல் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை பாரதிராஜாவின் மனோஜ் கிரியேஷன் நிறுவனம் தான் தயாரித்திருந்தது.

சிவகார்த்திகேயனின் மாவீரன் கதை காப்பி அடிக்கப்பட்ட கதையா.. யாரு இந்த வேலையை செய்தது தெரியுமா?

இந்த படம் சுமாரான வெற்றியை பெற்றது. ஒரு கிளாமர் ஹீரோயினியாக குஷ்புவை அந்த காலத்தில் ரசிகர்கள் பார்த்த நிலையில் திடீரென ஒரு ஆக்ஷன் ஹீரோயினியாக நடித்ததை ரசிகர்கள் ஒத்துக் கொள்ளவில்லை.
மேலும் லாஜிக் இல்லாமல் பல காட்சிகள் இருந்ததாக ஊடகங்கள் விமர்சனம் செய்தன. இதனால் குஷ்புவை வைத்து ஒரே படத்தை இயக்கிய பாரதிராஜாவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.