சிம்புவுடன் திருமணம் என்ற செய்தி உண்மையாக கூட இருக்கலாம்…. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை!

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்தாண்டு வெளியான பூமி படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை நிதி அகர்வால். இதனை தொடர்ந்து இரண்டாவது படமாக நடிகர் சிம்புவுடன் இணைந்து ஈஸ்வரன்…

nithi agarwal

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்தாண்டு வெளியான பூமி படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை நிதி அகர்வால். இதனை தொடர்ந்து இரண்டாவது படமாக நடிகர் சிம்புவுடன் இணைந்து ஈஸ்வரன் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாகவே கோலிவுட்டில் நடிகர் சிம்பு நடிகை நிதி அகர்வாலின் காதல் கதை தான் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் பல தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சமீபகாலமாக சிம்புவின் சினிமா சம்மந்தப்பட்ட முடிவுகளை கூட நிதி அகர்வால் தான் எடுத்து வருவதாக கூறப்படுகிறது. நாளுக்கு நாள் இருவரின் திருமணம் குறித்த தகவல் வெளியாகி கொண்டே வந்த நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நிதி அகர்வால் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, “நம்மை பற்றி எப்போதும் ஏதாவது எழுதப்பட்டு கொண்டுதான் இருக்கும். அதில் உண்மையும் இருக்கலாம், பொய்யும் இருக்கலாம். எது உண்மை என்று நம் பெற்றோருக்கு தெரிந்தால் போதும். மக்கள் பேசுவது எல்லாம் ஸ்கூலில் போடும் நாடகம் போன்றவைதான். நம் செய்யும் வேலைதான் அவர்களுக்கு பதில் சொல்லவேண்டும்” என கூறியுள்ளார்.

இப்போ இருக்குனு சொல்றாரா இல்லைனு சொல்றாரானு குழம்பி போகும் அளவிற்கு ஒரு பதிலை கூறியுள்ளார். இருப்பினும் இவரின் இந்த பதிலை கேட்ட ரசிகர்கள் எப்படியும் கத்திரிக்கா முத்துனா கடைத்தெருவுக்கு வந்து தான ஆகனும் என இவர்களின் காதல் கிசு கிசு குறித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன