இருபது ரூபாய் காயினுக்கு ‘ஆல்டோ கார்’….அசத்திய பிரபல யூடியூபர்!!

பல இடங்களில் பத்து ரூபாய் நாணயம் வாங்குவதை பலரும் மறுக்கிறார்கள். ஒரு சில பேருந்துகளிலும் நடத்தினார்கள் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கின்றனர். இது பலருக்கு சிரமத்தை ஏற்படுகிறது. இந்த நிலையில் விழிப்புணர்வாக பலரும்…

20 rupees coin 03

பல இடங்களில் பத்து ரூபாய் நாணயம் வாங்குவதை பலரும் மறுக்கிறார்கள். ஒரு சில பேருந்துகளிலும் நடத்தினார்கள் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கின்றனர். இது பலருக்கு சிரமத்தை ஏற்படுகிறது.

இந்த நிலையில் விழிப்புணர்வாக பலரும் நாணயங்களை வைத்து பொருட்களை வாங்குவது வாடிக்கையாக மாறிவிட்டது. அதிலும் வட இந்தியாவில் சில்லறை நாணயங்களை வைத்து பைக் மற்றும் கார்களை வாங்கும் அளவிற்கு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கொண்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது தமிழக யூடூப்பர் ஒருவர் வெறும் இருபது ரூபாய் காயின்களை வைத்து கார் வாங்கிய வீடியோ வைரலாகி கொண்டு வருகிறது. அவர் கிட்டத்தட்ட 2 லட்சம் ரூபாய்க்கு வெறும் ரூ.20 காயின்களை மட்டுமே வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வீடியோவில் அவர் கூறுகையில் பல இடங்களில் பத்து ரூபாய் நாணயம் வாங்க மறுப்பதை தவிக்கும் விதமாக இருபது ரூபாய் நாணயத்தை வைத்து கார் வாங்க உள்ளதாக கூறினார். இத்தகைய விழிப்புணர்வு சக யூடியூபர்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்று காணப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன