குருநாதர் என்றாலே சீடர்களை உருவாக்குபவர் தான். அப்படிப்பட்ட குரு உருவாக்கிய சீடர்கள் சில நேரங்களில் குருவையும் மிஞ்சி விடுவார்கள். ஆனால் அதை குருநாதர்கள் பொறாமையாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
பெருமையாக எடுத்துக் கொள்வார்கள். பாரதிராஜாவின் சீடரான பாக்கியராஜ் பல படங்களில் தனது அபாரதிறமையைக் காட்டியிருப்பார். தமிழ் சினிமாவில் அவர் நடித்து இயக்கிய பெரும்பாலான படங்கள் 100 நாள்களைக் கடந்து ஓடி வெற்றி பெற்றவை.
அவர் தனது குருநாதரின் பெயருக்கு பெருமை சேர்த்திருப்பார். அவரைப் போல பிற நடிகர்கள் யாரும் இருக்கிறார்களா என்றால் அந்த அளவுக்கு இருக்க முடியாது. பாக்கியராஜின் சீடர்களாக பார்த்திபன், பாண்டியராஜன் வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருவருமே அவரவர் பாணியில் படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் மாஸ் காட்டினார்கள்.
அந்த வகையில் நேயர் ஒருவர் பாரதிராஜா நடித்த தாவணிக்கனவுகள் படத்தில் அவரது காட்சிகளை இயக்கியது யார் பாக்கியராஜா, பாரதிராஜாவா என பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் நிகழ்ச்சி ஒன்றில் கேட்டு இருந்தார். அதற்கு அவர் அளித்த பதில் இதுதான்.
பாரதிராஜா நடித்த தாவணிக்கனவுகள் படத்தில் பல காட்சிகளை இயக்கியவர் பாரதிராஜா தான். ஒரு சில காட்சிகளைப் பாக்கியராஜ் இயக்கினார். பாரதிராஜாவின் சீடர் நிர்மல்குமார் தான் சலீம் என்ற படத்தை இயக்கியவர். இப்போது அவர் சசிக்குமார் நடித்துக்கொண்டு இருக்கிற ஒரு படத்தை இயக்கிக் கொண்டு இருக்கிறார். அதில் முக்கியமான கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடிக்கிறார்.
பாலசந்தர், பாரதிராஜா ஆகிய இருவரிடமும் உதவியாளராக இருந்த தாமிரா இயக்கிய படம் தான் இரட்டைச்சுழி. அதுல தனது குருநாதர்களான பாலசந்தர், பாரதிராஜா இருவரையுமே நடிக்க வைத்து இருந்தார் தாமிரா. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
1984ல் பாக்கியராஜ் நடித்து இயக்கிய படம் தாவணிக் கனவுகள். இளையராஜா இசை அமைத்துள்ளார். பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட். படத்தில் பாக்கியராஜ் உடன் இணைந்து சிவாஜி கணேசன், ராதிகா, பாரதிராஜா, நித்யா, உமா பரணி, இளவரசி, கோகிலா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் சிவாஜியை எப்படியாவது நடிக்க வைக்க வேண்டும் என்று நினைத்து பாக்கியராஜ் அவருக்காகவே ஒரு கேரக்டரை உருவாக்கினாராம். படத்தில் பாரதிராஜாவும் இயக்குனராகவே அசத்தலாக நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு கூடுதல் தகவல் என்னன்னா இந்தப் படத்தில் சித்ரா லட்சுமணன் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.
இவர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் பாக்கியராஜின் சீடர் பார்த்திபன் தபால் காரராக வருவார். படத்தில் மாமோய், ஒரு நாயகன், செங்கமலம் சிரிக்குது, வானம் நிறம் மாறும் ஆகிய பாடல்கள் உள்ளன.