2019 இல் சாதியப் பிரச்சினைகளை வலுவாக காட்டிய அசுரன்!!

அசுரன் 2019 இல் வெளியாகி பெரிய அளவில் பேசப்பட்ட திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தினை வெற்றிமாறன் எழுதி இயக்கி இருந்தார். பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை படத்திற்கு அடுத்தபடியாக 4 வது முறையாக இந்தக்…

அசுரன் 2019 இல் வெளியாகி பெரிய அளவில் பேசப்பட்ட திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தினை வெற்றிமாறன் எழுதி இயக்கி இருந்தார்.

பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை படத்திற்கு அடுத்தபடியாக 4 வது முறையாக இந்தக் கூட்டணி இணைந்துள்ளது.

வடக்கூடாரான் என்னும் நிலக்கிழாருக்கும் சிவசாமி என்னும் சிறு விவசாயிக்கும் இடையேயான நிலத்தகராறு. சிவசாமியின் நிலத்தினை எப்படியும் கைப்பற்ற நினைக்கையில், சிவசாமியின் மூத்த மகன் முருகனை வடக்கூரானின் மகன் கொன்று விடுகிறான்.

அதனால் கோபம் கொண்ட இளைய மகன் வடக்கூரானை கொலை செய்ய முயல்கிறான். அதனால் வடக்கூரான் இளைய மகனை கொல்ல அனுப்புகிறார்.

7a953007ce2e1ea8eac38c848ee46fc7

அதில் இருந்து தனுஷ் எவ்வாறு தப்பிக்கிறார், மேலும் தன் மகனை அந்தப் பிரச்சினையில் இருந்து காப்பாற்றுகிறார் என்பதே மீதிக் கதையாகும்.

பூமணி எழுதிய வெக்கை நாவலை படமாகி சுவாரஸ்யம் குறையாமல் வெற்றிமாறன் எழுதி இயக்கியுள்ளார்.

70 களில் இளைஞனாக சாதியப் பிரச்சினைகளை சந்திக்கும் இளைஞனாகவும், இக்காலத்தில் 60 வயதினை எட்டிய தந்தையாக பிரச்சினைகளை சந்திக்கும் வயதானவராகவும் தனுஷ் பின்னி இருப்பார்.

மஞ்சு வாரியர் முதல் படத்திலேயே தனக்கான நடிப்பால் சிறப்பான பெயர் பெற்றிருப்பார். மிகக் குறைவான பட்ஜெட்டில் உருவான இப்படம் பல கோடி வசூல் செய்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன