சிம்பு பற்றி தப்பாக பேச இதுதான் காரணம்!.. உண்மையை போட்டு உடைத்த காளை பட இயக்குநர்!..

By Sarath

Published:

கமல்ஹாசனின் ராஜ்கமல் நிருவனம் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் தனது 48வது படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இந்த படத்திலிருந்து சிம்புவின் ஃபர்ஸ்ட் லூக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பினை பெற்றது. அதை தொடர்ந்து இயக்குநர் தருண் கோபி சிம்புவின் மீது வரும் விமர்சனங்களை குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

இயக்குநர் மற்றும் நடிகரான டி.ராஜேந்திரனின் மகனான சிலம்பரசன் தன் தந்தை இயக்கிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தன் சினிமா வாழ்க்கையை தொடங்கினார். அதையடுத்து காதல் அழிவதில்லை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதை தொடர்ந்து அலை, கோவில், குத்து, மன்மதன், வல்லவன், வானம் என பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

சிம்பு பற்றி பேசிய காளை பட இயக்குநர்:

படப்பிடிபிற்கு சிம்பு சரியான நேரத்திற்கு வருவதே இல்லை, கமிட்டான படங்களை கூறிய சமயத்தில் முடித்துக் கொடுப்பது இல்லை என பல விமர்சனங்கள் காரணமாக சிம்பு சினிமாவை விட்டு சில காலம் விலகியே இருந்தார். மேலும், அதை தொடர்ந்து வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் யோகி பாபுவுக்கே டஃப் கொடுக்கும் வகையில் உடல் பருமனுடன் நடித்திருந்ததாக கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

சிம்பு தன் மனதை ஒருநிலைப்படுத்தி உடல் எடையை குறைத்த வீடியோவை வெளியிட்டு திரும்ப வந்துட்டேன் என மாஸ் காட்டினார். அதையடுத்து ஈஸ்வரன் படத்தில் ஒல்லியாக கம்பேக் கொடுத்து ரசிகர்கள் மனதில் இருந்த தன் இடத்தை காப்பாற்றிக் கொண்டார். ஆனால் படம் சரியாக ஓடவில்லை. அதை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கதில் மாநாடு படத்தில் நடித்து ஃப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் நூறு கோடி வரை வசூலை அள்ளியது. மேலும் சிம்புவின் வெந்து தனிந்தது காடு படமும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சிம்பு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் தயாரிப்பில் எஸ்டிஆர் 48 படத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே சிம்பு மீது வரும் விமர்சனங்கள் குறித்து தருண் கோபி பேட்டி ஒன்றில், செக்க சிவந்த வானம் படத்தின் படப்பிடிப்பின் போது சிம்பு எனக்கு போன் பண்ணி, நான் ஊருக்கு போறேன், கதை எதாவது இருக்கா, நாம் அடுத்த படம் பண்ணலாம், டிஸ்கஷனுக்கு பணம் எதாவது வேணும்னா சொல்லு அனுப்பிவிடுறேன் என்று கூறினார். அதற்கு நான் கடவுள் என்னை அந்த அளவுக்கு விட்டு விட வில்லை என சொன்னேன். ஐந்து வயது குழந்தை ஐம்பது வயதில் இருக்கும் பக்குவத்துடன் நடந்து கொண்டால் சிலர் ரசிப்பார்கள் ஆனால் சிலருக்கு எரிச்சலாக தான் இருக்கும்.

படப்பிடிப்பின் போது தவறு எதுவும் நடந்திருந்தால் அவர்களை தனியாக அழைத்து முகத்துக்கு நேராக சொல்லிவிடுவார் சிம்பு. தன்னை எல்லாம் தெரிந்தவர் என நினைத்திருப்பவர்கள் தான் சிம்புவை தவறாக விமர்சிக்கின்றனர். உண்மையிலேயே அவர் மனம் தங்கம் சார் என தருண் கோபி பேசியுள்ளார். சிம்புவை வைத்து காளை படத்தை தருண் கோபி இயக்கியது குறிப்பிடத்தக்கது.