Bigg Boss Tamil Season 8 : அதை திரும்ப கொடுத்துடுங்க.. வந்த வேகத்தில் விஷாலிடம் தர்ஷியா கேட்ட விஷயம்…

Vishal and Tharshika : பழைய போட்டியாளர்கள் எல்லாம் விருந்தினர்களாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சமயத்தில் நிச்சயம் இனி வரும் நாட்கள் திருவிழாவைப் போல களைக்கட்டும் என்று தான் அனைவருமே எதிர்பார்த்தனர். ஆனால்…

Vishal and Tharshika

Vishal and Tharshika : பழைய போட்டியாளர்கள் எல்லாம் விருந்தினர்களாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சமயத்தில் நிச்சயம் இனி வரும் நாட்கள் திருவிழாவைப் போல களைக்கட்டும் என்று தான் அனைவருமே எதிர்பார்த்தனர். ஆனால் அப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் அவர்கள் வெளியேறியதற்கு யார் யாரெல்லாம் காரணமாக இருந்தார்களோ, அவர்கள் மீது தங்களது வன்மத்தையும் வெளிப்படுத்தி இந்த பிக்பாஸ் களத்தை இன்னும் போர்க்களமாக தான் மாற்றி வருகின்றனர்.

இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரத்தில் முடிவுக்கு வரவுள்ள நிலையில் ஃபைனலுக்கு முன்னேறும் நபர்களின் கணிப்பு கூட மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதுவரை ஆறு போட்டியாளர்கள் தகுதி பெற்றுள்ள சூழலில் இனிவரும் நாட்களில் அவர்களது ஆட்டத்தை குறைப்பதற்காகவே எக்ஸ் போட்டியாளர்கள் வந்துள்ளனர்.

விஷால் தான் காரணமா..

இத்தனை நாட்கள் தன்னம்பிக்கையாக ஆடிய போதிலும் வெளியே இருந்து வருபவர்கள் சொல்லும் விஷயத்தை நம்பி தங்களின் ஆட்டத்திலும் மோசமான வெளிப்பாட்டுதலை காண்பித்து வருகின்றனர். இப்படி பல சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் தான் அன்ஸிதா மற்றும் தர்ஷிகா ஆகிய இருவர் வரும் போது விஜே விஷால் எப்படி ரியாக்ட் செய்வார் என்பதை பார்ப்பதற்கும் ரசிகர்கள் ஆவலாக இருந்து வந்தனர்.
VJ Vishal Love

இதற்கு காரணம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளில் இருந்தே மிக பலம் வாய்ந்த போட்டியாளராக மாறி இருந்த தர்ஷிகா, நிச்சயம் ஃபைனலுக்கு முன்னேறுவார் என அனைவரும் நினைத்தனர். ஆனால் நடுவே அவர் விஷாலுடன் நட்பாக பழகியது காதல் என வெளியே இருந்தவர்களும் கூற திடீரென தர்ஷிகாவின் ஆட்டத்தின் மீது விமர்சனம் உருவாகி அவர் வெளியேறியிருந்தார்.

இதே போல அன்ஸிதாவும் விஷாலுடன் நட்பாக பழகி பின்னர் அவரை காதலித்து அதன் பெயரில் பாதிக்கப்பட்டு தான் அவரது ஆட்டமும் தடுமாற்றத்தை கண்டதாக பலரும் குறிப்பிட்டிருந்தனர். இப்படி தர்ஷிகா மற்றும் அன்ஸிதா என இரண்டு பலம் வாய்ந்த போட்டியாளர்களை காதல் என்ற பெயரில் விஷால் வெளியே அனுப்பி விட்டதாகவும் அனைவரும் கூற, இதுவே அவரை தர்ம சங்கடத்திற்கும் ஆளாக்கி இருந்தது.

மோதிரத்தை திருப்பி கொடுங்க

இதற்கு மத்தியில் தர்ஷிகா எலிமினேட்டான சமயத்தில் அவரது தாயின் மோதிரம் ஒன்றை நினைவாக விஷால் கையில் கொடுத்திருந்தார். அந்த அளவுக்கு அவர்களுக்கு இடையேயான அன்பு இருந்த நிலையில் தான் தற்போது மீண்டும் வந்த தர்ஷிகா, விஷாலிடம், “நீங்கள் உங்களது ஆட்டத்தை அப்படியே விளையாடுங்கள். அம்மாவின் மோதிரத்தை திருப்பி கொடுங்கள். நான் இதற்காக என் அம்மாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றும் கூறுகிறார்.
Tharshi

தாய் மீதான பாசத்தினால் அவரது மோதிரத்தை வைத்திருந்த தர்ஷிகா, அதையும் தாண்டி விஷாலிடம் கொடுத்து சென்ற நிலையில் அதனை திரும்பி வாங்கி வைத்துள்ளது அவர்களிடையே எதுவும் இல்லை என்பதையும் நிரூபித்துள்ளது குறிப்பிடத்தக்கது.