அழகி முதல் அம்மாவின் கைபேசி வரை பல உணர்ச்சிகரமான படங்களை இயக்கியவர் தங்கர் பச்சான். இவரின் அழகி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படம். சிறந்த ஒளிப்பதிவாளரான தங்கர் பச்சான் சிறந்த படைப்புகளை கொடுத்த இயக்குனரும் கூட.
இவர் தனது மகன் விஜித் பச்சான் என்பவரை வைத்து டக்கு முக்கு டிக்கு தாளம் என்றொரு படம் இயக்குகிறார்.
முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இப்படம் இயக்கப்படுகிறது.
கிராமத்து கதையாக அல்லாமல் நகர பாணியில் இப்படம் உருவாகிறது.