பான் இந்தியா மோகத்தால் தமிழ் டைட்டிலை தவிர்த்து வரும் தளபதி விஜய்! எதிர்பாராத அப்டேட்!

By Velmurugan

Published:

தளபதி விஜய் தற்பொழுது தனது 68 வது திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.இந்த படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர்கள் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தி இருந்தது. தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்பது தளபதி 68 படத்தின் டைட்டில் ஆகும். இதை சுருக்கமாக GOAT ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் தளபதி விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது போஸ்டர் மூலம் உறுதியாகி உள்ளது.

தளபதி 68 திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, யோகி பாபு, பிரேம்ஜி, மைக் மோகன் என பிரம்மாண்ட கூட்டணி இணைந்துள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இடம் பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. அடுத்ததாக பொங்கலை முன்னிட்டு படத்தின் பாடல் அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். பிரம்மாண்ட பூஜையுடன் தொடங்கிய GOAT படத்தின் படப்பிடிப்பில் சென்னையில் ஒரு பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து GOAT படத்தின் படப்பிடிப்புகள் தாய்லாந்தில் நடந்து வந்தது. அதை அடுத்து சவுத் ஆப்பிரிக்காவில் மிகப்பெரிய பிரம்மாண்ட சண்டை காட்சி ஒன்று படமாக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. அந்த சண்டைக்காட்சியில் நடிகர் விஜய் மற்றும் மைக் மோகன் கலந்துள்ளதாக கூறப்படுகிறது. அதை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத், சென்னை என அடுத்தடுத்த ஷூட்டிங்கில் பிஸியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஸ்ரீலங்காவில் நடக்க இருப்பதாகவும் அங்கு லொகேஷன் பார்ப்பதற்காக இயக்குனர் வெங்கட் பிரபு சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னை ஷெட்யூல் முடிந்ததும் அடுத்ததாக படக்குழு ஸ்ரீலங்கா செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் அடுத்தடுத்து தன் படங்களுக்கு ஆங்கில டைட்டில் வைக்கும் தளபதி விஜய் என்ற சர்ச்சையும் தற்பொழுது சமூக வலைதளங்களில் வெடித்துள்ளது. பொதுவாக தளபதி விஜய் நடிக்கும் படங்களுக்கு மிகச்சிறந்த டைட்டில்கள் இடம் பெற்றிருக்கும். ஆனால் இயக்குனர் அட்லியுடன் இணைந்து தளபதி விஜய் நடித்த தெறி,மெர்சல், பிகில் போன்ற டைட்டில்கள் அதிகமாக வெளிவர துவங்கியது. அதன் பின் தளபதி விஜய் நடித்த மாஸ்டர், லியோ போன்ற திரைப்படங்களின் டைட்டில்களும் ஆங்கிலத்தில் அமைந்திருப்பது சில ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

டிக்கெட் முன்பதிவில் சாதனை படைத்த எம்ஜிஆரின் இரண்டு திரைப்படங்கள்!

பொதுவாக தளபதி விஜய் போன்ற மிகப் பெரிய முன்னணி ஹீரோக்களை வைத்து படம் எடுக்கும் பொழுது அந்தப் படங்களை பான் இந்தியா திரைப்படம் ஆக உருவாக்குவதில் தயாரிப்பு நிறுவனங்கள் ஆர்வம் செலுத்தி வருகிறது. தமிழில் டைட்டில் வைக்கும் பொழுது மற்ற மொழிகளில் இந்த படத்தை ரிலீஸ் செய்யும் பொழுது அந்த மொழிக்கேற்றவாறு டைட்டில்களை மாற்றி அமைக்க வேண்டும். ஆனால் ஆங்கில டைட்டில் வைக்கும் பொழுது அனைத்து மொழி ரசிகர்களுக்கும் பொருந்தும் வகையில் பொதுவாக அமைந்திருக்கும். இதன் காரணமாகவே தளபதி விஜய் மட்டுமல்லாமல் முன்னணி ஹீரோக்கள் நடிக்கும் திரைப்படங்களுக்கு ஆங்கில டைட்டில் வைப்பது சினிமா உலகின் தற்போதைய ட்ரெண்டாக உள்ளது. உதாரணமாக சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை செய்துள்ளது.