ஆந்திரா தயாரிப்பாளர் கிடைக்கலைன்னா என்ன?.. கர்நாடகா தயாரிப்பாளரை புக் பண்ணுவோம்!.. தளபதி 69 சம்பவம்!

By Sarath

Published:

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் நடித்து வருகிறார். அந்த படம் அடுத்த மாதத்திற்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவுற்று செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தளபதி 69 படத்தின் தயாரிப்பாளர் யார்?:

கோட் என சுருக்கமாக அழைக்கும் அந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக டோலிவுட் நடிகை மீனாட்சி சௌத்ரி நடித்துள்ளார். மேலும், சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், அஜ்மல், பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா கோட் படத்துக்கு இசையமைத்து வருகிறார். அவரது இசையில் நடிகர் விஜய் பாடிய முதல் பாடல் விசில் போடு சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

கோட் படத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் வீரர்கள் சிலர் நடித்துள்ளதாகவும் படத்தில் கிளைமாக்ஸ் காட்சி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் கடைசியாக நடிக்கவுள்ள தளபதி 69 படத்தை ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்து வெளியான டிவிவி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க போவதாக 250 கோடி ரூபாய் விஜய்க்கு சம்பளமாக வழங்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும் அந்த படத்தை அஜித் குமாரை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு படங்களை இயக்கிய எச் வினோத் இயக்கப் போவதாக கூறப்பட்டது.

ஆந்திரா தயாரிப்பு நிறுவனம் அவுட்:

ஆனால் கடைசி நேரத்தில் தெலுங்கு தயாரிப்பாளரான டிவிவி நிறுவனத்துக்கு தளபதி 69-வது படத்தை நடிகர் விஜய் கொடுக்க மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகின. இனி லைவ் தற்போது கன்னட நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் டாக்சிக் படத்தை தயாரித்து வரும் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் தயாரிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் விஜய் கேட்ட பெரிய தொகையை அந்த நிறுவனம் கொடுக்க சம்மதித்து இருப்பதாகவும், நடிகர் விஜய் எச் வினோத் இயக்கத்தில் கேவிஎன் தயாரிப்பு நிறுவனத்தில் தளபதி 69 படத்தை உருவாக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. நடிகர் விஜய்யின் பிறந்தநாளில் தளபதி 69வது படத்தின் பூஜை போடவும் திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றனர்.