நடிகர் விஜய் நடிப்பில் 69வது படம் தான் கடைசி படம் என்றும் அதன்பிறகு முழு நேர அரசியலில் ஈடுபடப்போவதாகவும் செய்திகள் வந்தன. தற்போது நடித்து வெளியான கோட் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்துள்ளது. வெங்கட்பிரபுவின் வழக்கமான மசாலா கலந்த கமர்ஷியல் படம்.
படத்தில் விஜய் 3 வேடங்களில் நடித்துள்ளார். மோகன் வில்லன். பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் உள்பட பலர் நடித்துள்ளனர். விஜயகாந்தை ஏஐ யில் காட்டுகிறார்கள். விஜயை டீஏஜிங்கில் இளமையுடன் காட்டுகிறார்கள். ஆனால் இரண்டும் எடுபடவில்லை.
குடியிருந்த கோயில், ராஜதுரை, வால்டர் வெற்றிவேல் போன்ற படங்களின் சாயல் இதிலும் இருப்பதாகவும் பலர் தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் கோட் படம் சளைக்காமல் வசூலை வாரிக்குவித்து வருகிறது. படத்தின் முதல் நாள் வசூலைத் தயாரிப்பு நிறுவனம் 126 கோடி என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். படத்தில் மட்ட சாங்கில் திரிஷா நடித்துள்ளார். நடிகர் விஜயின் 69வது படம் எச்.வினோத் இயக்குகிறார்.
அக்டோபர் மாத இறுதியிலோ, நவம்பர் மாதத் துவக்கத்திலோ இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு ஆரம்பாக இருக்கிறது. இப்போது அந்தப் படத்தோட தயாரிப்பாளர் மாறியிருப்பதாக ஒரு செய்தியைக் கேள்விப்படுகிறேன். மிக விரைவில் அதைப் பற்றி சொல்கிறேன் என்கிறார் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்.
முதலில் விஜயின் மேனேஜரே இந்தப் படத்தைத் தயாரிக்கப் போகிறார். அப்போது தான் இந்தப் படத்தில் சுதந்திரமாக சில விஷயங்களைப் பண்ண முடியும் என்றும் வலைதளங்களில் செய்திகள் வந்தன.
இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கும். அரசியல் சார்ந்த படமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் அவரது அரசியலுக்கு வலுவான அடித்தளத்தை உருவாக்கும் என்றும் நம்பப்படுகிறது.
200 கோடி சம்பளம் வாங்கி வரும் விஜய் திடீரென அரசியலில் முழுவதுமாக களம் இ
றங்குவதாகவும், சினிமாவில் இருந்து முழுமையாக விலகப்போவதாகவும் அறிவித்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜயைப் பொருத்தவரை அவர் மார்க்கெட்டை இழக்காமல் இருக்கிறார்.
சிலர் திரைத்துறையில் மார்க்கெட் டல்லடித்தால் அரசியல் பக்கம் திரும்புவார்கள். அவர் இடத்தை அடுத்து பிடிக்கப்போவது யார் என்றும் பேச்சு அடிபடுகிறது. அந்த இடத்திற்கு சிவகார்த்திக்கேயன் தான் பொருத்தமானவர் என்றும் அதனால் தான் கோட் படத்தில் அவருக்கு அப்படி ஒரு கேமியோ ரோலைக் கொடுத்துள்ளார்கள் என்றும் ஊடகங்களில் விமர்சகர்கள் பேசி வருகிறார்கள்.