நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். ஆனாலும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். இறுதியாக அவர் கமிட்டான ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு முழு நேர அரசியல்வாதியாக மாற இருக்கிறார் விஜய்.
நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்ததற்கு பல நடிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றனர். களத்தில் இறங்கி பணி செய்து கொண்டிருக்கின்றனர். அப்படி விஜய்யின் தீவிர ஆதரவாளர் தான் நகைச்சுவை நடிகர் மற்றும் விஜய் டிவி புகழ் தாடி பாலாஜி.
விஜயின் தமிழக வெற்றி கழகம் சார்பில் நடத்தப்படும் எல்லா நிகழ்ச்சிகளிலும் கண்டிப்பாக தாடி பாலாஜி கலந்து கொள்வார். சமீபத்தில் அவர் நடிகர் விஜயின் முகத்தை தனது நெஞ்சில் பச்சை குத்தியது கூட பிரபலமானது.
எதற்காக தாடி பாலாஜி இப்படி செய்கிறார் விஜய்யின் கட்சியில் சீட்டு வாங்குவதற்காக இப்படி செய்கிறாரா என்றும் பேச்சுகள் நிலவி வந்தது. இந்நிலையில் தற்போது தாடி பாலாஜி தமிழக வெற்றி கழகத்தில் தனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.
விஜயை பல லட்சம் பேருக்கு தெரியும். ஆனால் என்னுடைய திறமைக்கு ஒரு 100 பேருக்கு கண்டிப்பாக என்னை தெரியும். ஆனால் தமிழக வெற்றி கழக கட்சி நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொண்டால் Focus என்மேல் விழும் என்பதால் விஜயுடன் இருப்பவர்கள் வேண்டுமென்றே என்னை தவிர்த்து விடுகிறார்கள். ஆனால் நான் தலைவனுக்காக மட்டுமே உழைக்கிறேன். எனது உழைப்புக்கு நிச்சயம் பலன் கிடைக்கும் என்று ஆதங்கத்துடன் பேசி இருக்கிறார் தாடி பாலாஜி.