சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனாவின் கோரப் பிடியில் தற்போது இந்தியாவும் சிக்கித் தவித்து வருகின்றது. கொரோனா தொற்றினைக் கட்டுக்குள் வைக்க இந்தியாவில் மார்ச் 24 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கால் சினிமாப் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் நடிகர்கள் சமூக வலைதளங்களில் ஏதாவது ஒரு வகையில் பொழுது போக்கி வந்தனர். சினிமாப் படப்பிடிப்புகள் உட்பட பல தொழில்களும் நலிவடைந்து போக நாடானது பொருளாதார வீழ்ச்சியினை சந்தித்துள்ளது.
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துவரும் இந்தநிலையில், சில முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் சில முக்கியத் தொழில்களுக்கு தளர்வுகள் ஆங்காங்கே அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், ஆந்திரா மற்றும் தெலுங்கான மாநில அரசுகள் திரைப்படப் படப்பிடிப்புகளை பாதுகாப்பான முறையில் நடத்த வேண்டும் என்று கூறி, தளர்வுகளை அறிவித்துள்ளன.
இதனால் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில திரையுலகினர் படப்பிடிப்பினை நடத்த ஆயத்தமாகி உள்ளனர்.
அந்தவகையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி வீட்டில் படப்பிடிப்பு நடத்துவது குறித்து நாகார்ஜூனா, அல்லு அர்ஜுன், இயக்குநர் ராஜமௌலி, ராம் சரண், நாக சைதன்யா, விஜய் தேவரகொண்டா, தெலுங்கானா திரைப்படத்துறை அமைச்சர் ஸ்ரீனிவாஸ் போன்றோர் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தியுள்ளனர்.