கின்னஸ் உலக சாதனை படைத்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி.. அப்படி என்ன சாதனை தெரியுமா?

By John A

Published:

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போல, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் போல தெலுங்கு திரையுலகில் மெகா ஸ்டாராக கலக்கி வருபவர்தான் நடிகர் சிரஞ்சீவி. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சென்னை திரைப்படக் கல்லூரியில் ஒன்றாக பயின்ற பொழுது இருவரும் நெருக்கமான நண்பர்களாயினர்.

மேலும் ரஜினியுடன் மாப்பிள்ளை, ராணுவ வீரன், காளி போன்ற படங்களிலும் நட்புக்காக நடித்திருக்கிறார். தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கி வரும் சிரஞ்சீவி அடிப்படையிலேயே சிறந்த நடனத் திறமை வாய்ந்தவர்.

1978-ம் ஆண்டில் தன்னுடைய திரைப்பயணத்தினைத் தொடங்கிய சிரஞ்சீவி இதுவரை சுமார் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 45 ஆண்டுகாலம் சினிமாத் துறையில் இருக்கும் சிரஞ்சீவி இதுவரை 537 பாடல்களில் நடன அசைவுகளை வெளிப்படுத்தியுள்ளார். தற்போது இந்தச் சாதனைக்குத் அவருக்கு கின்னஸ் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்தப்படம் அப்படியே என் வாழ்க்கை தான்… படம் பார்த்துட்டு தேம்பி தேம்பி அழுதேன்… சக்தி பி வாசு எமோஷனல்…

நடிகர் சிரஞ்சீவி இதுவரை சுமார் 24000 நடன அசைவுகளை தான் நடித்த பாடல்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். இது எந்த நடன இயக்குநரோ அல்லது நடிகரோ இதுவரை செய்யாத சாதனையாகும். ஹைதராபாத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவருக்கு இந்த சாதனைக்கான கின்னஸ் விருது வழங்கப்பட்டது.

கின்னஸ் பாராட்டுச் சான்றிதழை வழங்கியது யார் தெரியுமா? பாலிவுட் நட்சத்திரம் அமீர்கான் சிரஞ்சீவிக்கு இந்த பாராட்டுச் சான்றிதழை வழங்கி கௌரவித்தார். அப்போது அவர் சிரஞ்சீவியின் நடனத் திறமை பற்றிக் கூறும் போது, “ எவ்வளவு கஷ்டமான ஸ்டெப்பாக இருந்தாலும் அசால்ட்டாக ஆடி விடுவார். மேலும் எந்தப் பாடலைப் பார்த்தாலும் அதில் மகிழ்ச்சியாக ஆடி இருப்பார். அவர் ஆடுவதைப் பார்த்துவிட்டால் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று அமீர்கான் பேசினார்.