ஜூன் 22 ஆம் தேதி தமிழன் திருவிழா… ஹேஸ்டேக்கினை பிரபலமாக்கிய விஜய் ரசிகர்கள்!!

விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். 1988 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான இவர் 32 ஆண்டுகளாக சினிமாவில் நிலைத்து நின்று வருகிறார். துவக்க காலத்தில் தனது தந்தையின் ஆதரவால் இருந்தாலும்,…

விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். 1988 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான இவர் 32 ஆண்டுகளாக சினிமாவில் நிலைத்து நின்று வருகிறார். துவக்க காலத்தில் தனது தந்தையின் ஆதரவால் இருந்தாலும், அதன்பின்னர் அவரது கடுமையான உழைப்பால் இந்த அளவு உச்சநிலையினை அடைந்துள்ளார்.

ரசிகர்களால் செல்லமாக இளையதளபதி என்று அழைக்கப்படுகிற இவருக்கு இந்தியாவில் மட்டுமல்லாது சீனா, ஜப்பான், அமெரிக்கா, வளைகுடா நாடுகள், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் ரசிகர்கள் உள்ளனர்.

910f20edb965db7db06e77c7cbbd8e1d

தமிழ்நாட்டினைத் தாண்டி கேரளாவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். விஜய் படம் வெளியாகும்போது தமிழ்நாட்டில் இருக்கும் கொண்டாட்டம் போலவே கேரளாவிலும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி, நடிகை மாளவிகா மோகன் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். இந்த திரைப்படம் இந்த மாதம் 9 ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில், ஊரடங்கினால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது அஜித் பிறந்தநாள் அடுத்த மாதம் 1 ஆம் தேதி வரவுள்ள நிலையில், அஜித் ரசிகர்கள் இப்போதே அதனைக் கொண்டாடுகையில், விஜய் ரசிகர்கள் பதிலுக்கு ஜூன் மாதம் வரவுள்ள பிறந்தநாளை இப்போதே கொண்டாடுகின்றனர்.

அதாவது, விஜய் ரசிகர்கள், ஜூன் 22 ஆம் தேதி தமிழன் திருவிழா என்ற ஹேஸ்டேக்கினை உருவாக்கி டுவிட்டரில் அஜித் ரசிகர்களுக்கு எதிராக பெரிய அளவில் டிரெண்டிங்  செய்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன