வழக்கமாக ஒரு நடிகர் சிங்கிள் கதாபாத்திரங்களில் தோன்றி நடிப்பது வழக்கம். எனினும் கதைக்காகவும், வித்தியாசமான கதாபாத்திரங்களுக்காகவும் அவர்களே இரட்டை வேடங்களில் நடிப்பது வழக்கம். அந்தக் காலத்து சூப்பர் ஸ்டார்கள் தொடங்கி இப்போதுள்ள தனுஷ் வரை இரட்டை வேடங்களில் நடித்து அசத்தி வருகின்றனர். எனினும் தமிழ் சினிமாவின் முதல் டபுள் ஆக்ட் ஹீரோ என்ற பெருமையைப் பெற்றவர் அந்தக் காலத்து சூப்பர் ஸ்டாரான பி.யூ.சின்னப்பாதான்.
இரட்டை வேடம் மட்டுமல்ல.. முதல் மூன்று வேட ஹீரோவும் இவரே. இவற்றையெல்லாம் விட உச்சமாக கமல் இப்போது தசாவதாரத்தில் செய்த பத்து வேட சப்ஜெக்டை தொழில்நுட்பங்கள வளராத அந்தக் காலத்திலேயே நடித்து அசத்தியிருப்பார் பி.யூ.சின்னப்பா.
15 ரூபாய் சம்பளத்தில் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தவர் பின்னாளில் தமிழ் சூப்பர் ஸ்டாராக நடிப்பில் வெற்றிக் கொடி நாட்டினார். 1936-ம் ஆண்டு வெளியான சந்திரகாந்தா என்ற படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்த இவர் பஞ்சாப் கேசரி, அநாதை பெண், உத்தமபுத்திரன், ஆரியமாலா உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த இவர் எம்.ஜி.ஆர், சிவாஜி காலகட்டத்திற்கு முன்தமிழ் சினிமாவின் செல்வாக்கு மிக்க நடிகராகத் திகழ்ந்தார். வறுமை காரணமாக கயிறு திரிக்கும் வேலைக்குச் சென்றுபின்னர் நடிப்பின் மீது கொண்ட ஆசையால் நாடக சபாக்களில் வாய்ப்பு பெற்று பின்னாளில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்தார்.
வாள் சண்டை, சிலம்பம் போன்றவற்றில் மிகுந்த தேர்ச்சி பெற்ற பி.யூ.சின்னப்பா உத்தமபுத்திரன், ஜகதலப்பிரதாபன், கண்ணகி, ஆர்யமாலா போன்ற படங்களில் நடித்து பெரும்புகழ் பெற்றார். இதில் உத்தமபுத்திரன் படம்தான் இரட்டை வேடங்களில் அவர் தோன்றியது.
மேலும் மங்கையர்க்கரசி என்ற படத்தில் மூன்று வேடங்களில் நடித்து அசத்தினார். இவை எல்லாவற்றையும் வட உச்சமாக அப்போது சிவாஜி, கமல் போன்றோர் செய்த 9 வேடங்கள், 10 வேட கதாபாத்திரங்களை முன்னோடியாக தனது ஆர்யமாலா படத்தில் நடித்து அசத்தி ரசிகர்களுக்கு புது சினிமா அனுபவத்தினைக் கொடுத்தார்.
இவ்வாறு பல்வேறு வகையிலும் சினிமாவில் தியாகராஜ பாகவதருக்குப் போட்டியாக விளங்கிய பி.யூ சின்னப்பா தனது அதீத குடிப்பழக்கத்தால் குறைந்த அளவு திரைப்படங்களில் மட்டுமே நடித்து தனது 35 வயதிலேயே இவ்வுலக வாழ்விற்கு விடை கொடுத்தார்.