தமிழ் சினிமாவில் ஏழை பங்காளர்கள் 2

By Staff

Published:

தமிழ் சினிமாவில் ஏழை பங்காளர்கள் என்ற தலைப்பில் நேற்றைய பதிவில் சில படங்களை பார்த்தோம். அதாவது இல்லாத ஏழைகளுக்காக சமூக குற்றங்களை செய்து அவர்களுக்கு உதவுவதுதான் பெரும்பாலும் ஏழை பங்காளர்கள் சம்பந்தமான படத்தின் கதையாக இருக்கும்.

dcee810ecc1b693086523857e615d31e

ஜென்டில்மேன்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய முதல் படம். அதற்கு முன் இயக்குனர் பவித்ரனிடம் சூரியன் படத்தின் அசிஸ்டண்டாக இருந்த ஷங்கர் அப்படத்தின் தயாரிப்பாளர் கே.டி குஞ்சுமோன் அவர்களால் இப்படம் தயாரிக்கப்பட்டது.

இல்லாத ஏழைகள் கல்லூரி பயில்வதற்காக தனக்கு சீட் கிடைக்காததால் வாழ்க்கையில் பல நஷ்டங்களை சந்தித்ததால் மற்றவர்களும் அப்படி ஆகி விடக்கூடாது என்பதற்காக கதாநாயகன் அர்ஜூனும், அவருக்கு உதவியாக கவுண்டமணியும் சேர்ந்து பகலில் அப்பளம் உற்பத்தி செய்பவராகவும் இரவில் கொள்ளையடிப்பவராகவும் நடித்திருப்பர்.

கொள்ளையடித்தவற்றை ஏழைகளுக்காக செலவிடும் கதை இது. சிறப்பான வேடத்தில் நடிகர் சரண்ராஜ் நடித்திருப்பார்.

அதர்மம்

இயக்குனர் ரமேஷ்கிருஷ்ணன் இயக்கத்தில் வந்த படமிது. சந்தன வீரப்பன் கதையை கொஞ்சம் உல்டா செய்து எடுத்த படமிது. ஊரில் சந்தன மரம் வெட்டி கடத்துகிறார்கள் நாசரும் அவரது தம்பி முரளியும் வரும் வருவாயில் மலை கிராம மக்களுக்கு உதவி செய்கிறார்கள்.

போலீசை பகைத்து கொள்ள நாசரை கொன்று விடுகிறார்கள். சந்தன வீரப்பன் அவர் தம்பி அர்ச்சுனனின் கதை போல இப்படம் இருக்கும். இளையராஜாவின் இசையில் இப்படம் சிறப்பான பாடல்களுடன் நல்ல பின்னணி இசையுடன் வந்திருந்தது. முரளிக்கு நீண்ட நாட்களுக்கு பின் நல்ல வெற்றியை கொடுத்த படமிது.

இன்னும் இதுபோல சில படங்களை மூன்றாவது பதிவில் காண்போம்.

Leave a Comment