தமிழ் சினிமா இயக்குனர்கள் மீது கடும் கோபமடைந்த நடிகர் வேல ராமமூர்த்தி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல புதிய படங்களில் கோலோச்சி வருபவர் வேல ராமமூர்த்தி. இவர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருநாழியை சேர்ந்தவர். Actor Vela Ramamoorthy in Sethupathi Movie Stills…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல புதிய படங்களில் கோலோச்சி வருபவர் வேல ராமமூர்த்தி. இவர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருநாழியை சேர்ந்தவர்.

e9cd345fa4fbb5eb8602e92e43152619-2
Actor Vela Ramamoorthy in Sethupathi Movie Stills

இயல்பாக நடிக்க தெரிந்த இவருக்கு சினிமா வாய்ப்புகள் அதிகம் வருவதில் வியப்பில்லை.

நல்லதொரு எழுத்தாளர் இவர். இவர் இயக்கிய குற்றப்பரம்பரை கதையை வைத்து கூட பாலா இயக்கத்தில் படம் இயக்க இருப்பதாக செய்தி அடிபட்டது.

இவர் எழுதிய பட்டத்து யானை, அரிய நாச்சி,குற்றப்பரம்பரை உள்ளிட்ட படங்களை பட்டி டிங்கரிங் பார்த்து தங்களது கதைகளில் சில இயக்குனர்கள் கோர்த்து விட்டு விடுகின்றனர்.

இதை பார்த்த வேலா ராமமூர்த்தி, எனது படைப்புகள் அனைத்தும் நீண்ட கால உழைப்பு பிரசித்தி பெற்ற வார இதழ்களில் தொடராக வெளிவந்தவை, புத்தகமாக பல ஆயிரம் பிரதிகள் விற்று சாதனை படைத்தவை.

ஒவ்வொரு நாவலும் என் எத்தனை கால ஆண்டு கால உழைப்பை தின்றிருக்கும்.இண்டு இடுக்குகளில் நுழைந்து தப்பித்து கொள்ளும் உங்களுக்கு எத்தனையோ வழிகள் உள்ளது. உள்ளுக்குள் உறுத்தினால் நீங்க உருப்படுவீர்கள் என தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன