குரு சிஷ்யன் படத்தில் இடம்பெற்ற உத்தமபுத்திரி நானு என்ற பாடலின் மூலம் அறிமுகமானவர் ஸ்வர்ணலதா. சில வருடங்களிலேயே 7000 பாடல்களை பாடி பிரபலமடைந்தார். அதே போல் மிக குறுகிய வயதான 37 வயதில் மரணமடைந்தார்.
இசைஞானி இளையராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டார்
மாலையில் யாரோ மனதோடு பேச என்ற ஒற்றைபாடலே கேட்டால் நமக்கு சாப்பாடு, தண்ணீர் வேண்டாம் அந்த பாடல் ஒன்றையே கேட்டுக்கொண்டிருந்தால் போதுமானது என நினைக்க வைக்கும் பாடலிது. இது போல இவரின் பல பாடல்கள் தித்திக்கும் தேனில் ஊறிய பலாச்சுளை போன்றது.
காட்டுக்குயில் பாட்டு சொல்லு, நில்லாத வெண்ணிலா நில்லு நில்லு உன் வாசலில், ஆட்டமா தேரோட்டமா, சொல்லி விடு வெள்ளி நிலவே, என்னை தொட்டு அள்ளிக்கொண்ட, போறாளே பொன்னுத்தாயி, எவனோ ஒருவன் வாசிக்கிறான் என இவரின் பாடல்களை அடுக்கிக்கொண்டே போகலாம் அத்தனையும் ரிப்பீட் மோடில் கேட்க வைக்கும் பாடல்கள் இன்னும் நிறைய பாடல்கள் உண்டு.
நேற்று 12.09.2019டன் அவர் இறந்து 9 ஆண்டுகள் ஆகிறது. இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்ற பாடல் வரிகளுக்கேற்ப இவரின் பாடல்கள் காலம் கடந்தும் கரும்பாய் இனித்து கொண்டிருக்கிறது.
நினைவஞ்சலிகள் ஸ்வர்ணலதா