சூர்யா நடிக்கும் கருப்பு திரைப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பு… போட்டிப்போடும் விநியோகஸ்தர்கள்…

சூர்யா தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான முன்னணி நடிகர் ஆவார். இவரது தந்தை சிவக்குமார் தமிழ் சினிமாவில் பணியாற்றிய மூத்த நடிகர். அதன்மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு சூர்யாவிற்கு கிடைத்தது. இவரது இளைய சகோதரர்…

surya

சூர்யா தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான முன்னணி நடிகர் ஆவார். இவரது தந்தை சிவக்குமார் தமிழ் சினிமாவில் பணியாற்றிய மூத்த நடிகர். அதன்மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு சூர்யாவிற்கு கிடைத்தது. இவரது இளைய சகோதரர் கார்த்திக் மற்றும் இவரது மனைவி ஜோதிகா ஆகியோரும் முன்னணி நடிகர்களாக இருக்கின்றனர்.

1997 ஆம் ஆண்டு நேருக்கு நேர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் சூர்யா. 2001 ஆம் ஆண்டு நந்தா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார். தொடர்ந்து காக்க காக்க, பிதாமகன், வேல், வாரணம் ஆயிரம், ஏழாம் அறிவு என 2010 காலகட்டத்தில் புகழின் உச்சியில் இருந்தார் சூர்யா.

இவரை மேலும் பிரபலமாக்கியது சிங்கம் பட தொடராகும். சிங்கம் ஒன்று இரண்டு மூன்று என்ற மூன்று பாகங்களும் வெற்றி பெற்றது. 2015 காலகட்டத்திற்கு பிறகு இவர் நடித்த படங்கள் பெரிதாக வணீக ரீதியாக வெற்றிப் பெறவில்லை. இறுதியாக இவர் நடித்த கங்குவா திரைப்படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு ஏமாற்றத்தை பெற்றது.

தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் Retro திரைப்படத்திலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்திலும் நடித்துக் கொண்டிருந்தார் சூர்யா. இதில் Retro திரைப்படம் முடிவடைந்து ரிலீஸானது. ஆனால் இப்படம் பெரிதாக பேசப்படவில்லை.

அடுத்ததாக ஆர்.ஜே பாலாஜி இயக்கி சூர்யா நடித்த கருப்பு திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கருப்பு திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் ஆரவாரத்தை பெற்றிருக்கிறது. டீசர் மிக பிரம்மாண்டமாக இருப்பதால் இந்த படம் கண்டிப்பாக நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் எழுந்துள்ளது. அதனால் இந்த படத்தை வாங்குவதற்காக விநியோகஸ்தர்கள் போட்டி போட்டு வந்து கொண்டிருக்கிறார்களாம். ஆனால் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்திற்கான பட்ஜெட்டை இன்னும் தீர்மானிக்கவில்லையாம். அதனால் விநியோகஸ்தர்களை காக்க வைத்திருக்கிறார்களாம். நீண்ட இடைவேளைக்கு பிறகு சூர்யாவின் படத்திற்கு இப்படி போட்டி போட்டு விநியோகஸ்தர்கள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டுவதை பார்க்க மகிழ்ச்சியாக தான் இருக்கிறது. இந்த படம் நிச்சயமாக சூர்யாவுக்கு கைகொடுக்கும் என்று சினிமா வட்டாரங்களில் பேச்சுக்கள் நிலவுகிறது.