நடிகர் சூர்யாவுக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளதாக அவருடைய பிஆர்ஓ தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் சூர்யா வீட்டில் இருக்கும் போது கீழே தவறி விழுந்ததாகவும் இதனால் அவருடைய இடது கையில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது
இருப்பினும் இந்த காயம் சிறிய அளவிலான காயம் தான் என்றும் பயப்படும்படி எதுவும் இல்லை என்றும் இதனை அடுத்து சூர்யா ரசிகர்கள் இது குறித்து அச்சப்படத் தேவையில்லை என்றும் அந்த பி.ஆர்.ஓ தெரிவித்துள்ளார். இதனால் சூர்யாவின் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இருப்பினும் சூர்யாவுக்கு காயம் என்ற தகவல் கோலிவுட் திரைஉலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சூர்யா தயாரித்த பொன்மகள் வந்தாள் திரைப்படம் வரும் 29ஆம் தேதி அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் ஹரி இயக்கத்தில் அருவா, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல், சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு ஆக்சன் படம் மற்றும் சுதாகொங்காரா இயக்கத்தில் மேலும் ஒரு படம் என வரிசையாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது