சூர்யாவின் ‘வாடிவாசல் பர்ஸ்ட்லுக்: யார் பார்த்த வேலை இது!

நடிகர் சூர்யா நடிப்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் ’வாடிவாசல்’ என்ற திரைப்படம் உருவாக இருப்பது குறித்த செய்தி ஏற்கனவே வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு இவ்வருட இறுதியில் தான் தொடங்கும்…


88c6ce471e38ba16815332ada4e923db

நடிகர் சூர்யா நடிப்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் ’வாடிவாசல்’ என்ற திரைப்படம் உருவாக இருப்பது குறித்த செய்தி ஏற்கனவே வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு இவ்வருட இறுதியில் தான் தொடங்கும் என்றும் கூறப்பட்டது

நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று படமே இன்னும் ரிலீசாகவில்லை. இதன் பின்னர் ஹரி இயக்கும் படத்தில் அவர் ஒரு படத்தில் நடித்து முடித்து விட்டு அதன் பின்னர்தான் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார். எனவே இந்த படம் 2021 ஆம் ஆண்டு மத்தியில் தான் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஆனால் அதற்குள் இன்று காலை முதல் வாடிவாசல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து விசாரித்தபோது இது ஒரு ரசிகர் டிசைன் செய்த போஸ்டர் என்று தெரிய வருகிறது. அடுத்த வருடம் வெளியாக இருக்கும் படத்திற்கு இப்போதே சூர்யாவின் ரசிகர்கள் டிசைனை வெளியிடத் தொடங்கி விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன