தளபதி விஜயை வைத்து அட்லி எடுத்துள்ள படம் பிகில், இவர்களின் வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. இந்தப் படம் அடுத்தவாரம் தீபாவளையை ஒட்டி வெளியாக உள்ளது.
இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இதில் கதிர், டேனியல் பாலாஜி, விவேக், இந்துஜா, ரோபோ ஷங்கர் என பலரும் நடித்துள்ளனர்.
இதன் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது. பலரும் இப்போதே பிகில் படத்திற்கான கொண்டாட்டத்தினை துவங்கிவிட்டனர்.
அந்த வகையில் கொண்டாட்டத்தில் பிக் பாஸ் முகினும் ஈடுபட, அவருக்கு ஒரு கிப்ட்டினை தளபதி ரசிகர்கள் கொடுத்துள்ளன. பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர், இந்தப் போட்டியில் விருதினை வென்றவர் மலேசியாவைச் சார்ந்த முகின் ராவ் ஆவார்.
அதாவது தளபதியின் பிகில் படம்போட்ட டி-ஷர்ட் முகினுக்கு விஜய் ரசிகர்கள் வழங்கி உள்ளனர். பிகில் ட்ரைலர் ரிலீஸ் ஆன போது, தர்ஷன், முகின் ஆகியோர் பிகில் படக் குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
முகின் இதனை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.