விஜய் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி பிக் பாஸ் ஆகும். 105 நாட்களுடன் இந்த நிகழ்ச்சியானது நேற்று இனிதே இதன் பிரமாண்ட விருது வழங்கும் விழாவினைக் கொண்டாடியது.
நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் உள்ளே சென்று போட்டியாளர்களை வரவேற்ற கமல் ஹாசன் இறுதிநாளான நேற்று வீட்டிற்கு போட்டியாளர்களை சந்திக்க சென்றார்.
அவரைப் பார்த்ததும், போட்டியாளர்கள் சற்று பதட்டத்துடனே காணப்பட்டனர், அப்போது சர்ப்ரைஸ் பண்ணும்விதமாக சாண்டி, லோஸ்லியா, ஷெரின், முகென் ஆகியோருக்கு கமல் ஹாசன் கடிதம் எழுதி கொண்டு வந்திருந்தார்.
அடுத்து போட்டியாளர்கள் குறித்த வீடியோ காண்பிக்கப்பட்டது. முதல் வீடியோவாக மலேசியாவில் இருந்த முகெனின் நண்பர்கள் அவர் வேலை செய்யும் இசைக்குழு குறித்த வீடியோ போட்டு காட்டப்பட்டது.
அடுத்து ஷெரினின் நாய்க்குட்டியின் வீடியோ போட்டு காட்டப்பட்டது. மூன்றாவதாக சாண்டியின் டான்ஸ் ஸ்டூடியோ வீடியோ போட்டுக் காட்டப்பட்டது. இறுதியாக லாஸ்லியாவின் வீடு மற்றும் இலங்கைக் கடல் போன்றவைகள் போட்டு காட்டப்பட்டது.