நடிகர் சூர்யாவின் மகன் தேவ் கராத்தே போட்டியில் கலந்து கொண்டு பிளாக் பெல்ட் வாங்கிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவின் மகனான தேவ் சென்னையில், தாத்தா சிவகுமார் வீட்டில் ஒரே குடும்பமாக படித்து வாழ்ந்து வந்தார்.
கடந்த ஆண்டு நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் குழந்தைகளின் படிப்புக்காக மும்பைக்கு புறப்பட்டுச் சென்றனர். அங்கே தனியாக வீடு ஒன்றை வாங்கிக் கொண்டு வசித்து வருகின்றனர் எனக் கூறப்பட்டது.
கராத்தே கிட்டான சூர்யா கிட்:
இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற கராத்தே நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு நடிகர் சூர்யாவின் மகன் தேவ் பிளாக் பெல்டை வாங்கியுள்ளார். நடிகர் சூர்யா அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது மகனை உற்சாகப்படுத்திய காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.
நடிகர் சூர்யாவுக்கு அருகே அவரது மகன் நன்றாக வளர்ந்து அவரது உயரத்திற்கு தற்போது வந்திருப்பதை பார்த்த ரசிகர்கள் சூர்யாவின் மகன் மேலும் பல உயரங்களை தொட வேண்டும் என வாழ்த்தி வருகின்றனர்.
தாத்தா சிவகுமார் முன்னணி நடிகராக வலம் வந்தார். அப்பா சூர்யா, அம்மா ஜோதிகா மற்றும் சித்தப்பா கார்த்தி என அனைவருமே சினிமாவில் முன்னணி நடிகர்களாக பல வெற்றிப் படங்களில் நடித்து வரும் நிலையில், கூடிய சீக்கிரமே அடுத்த வாரிசாக தேவ் சினிமாவுக்குள் வந்து விடுவார் போல தெரிகிறது என ரசிகர்கள் குட்டி சூர்யா என அவரை அன்போடு அழைத்து வருகின்றனர்.
பிளாக்பெல்ட் வாங்கிய தேவ்:
நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவருமே உடற்பயிற்சியில் தீவிர அக்கறை செலுத்தி வருகின்றனர். அதேபோல தங்களது குழந்தைகளையும் ஃபிட்டாகவும் பல்வேறு சிறப்பு பயிற்சிகளை வழங்கியும் நன்றாக வளர்த்து வருகின்றனர்.
மகள் தியா மற்றும் மகன் தேவ் இருவரும் நன்றாக படித்து பல சாதனைகளையும் படைத்து வருகின்றனர். சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் சினிமாவில் தீவிரம் காட்டினாலும் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதிலும் பேணிக் காப்பதிலும் மிகுந்த அக்கறையை செலுத்தி வருகின்றனர்.
அதேபோல கோடை விடுமுறை காலத்தில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது, குடும்பத்துடன் பல நாடுகளுக்கு செல்வது என குழந்தைகளுடன் அதிக நேரத்தை சூர்யா மற்றும் ஜோதிகா செலவழித்து வருகின்றனர்.
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் இந்த ஆண்டு வெளியாக காத்திருக்கிறது. அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் படத்தில் சூர்யா நடித்த ஒப்பந்தம் ஆகியுள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு உள்ளிட்ட படங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
நடிகர் ஜோதிகா நடித்த இந்தியில் வெளியான சைத்தான் திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது. விரைவில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள டப்பா கார்டெல் வெப்சீரிஸ் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
Proud Father Moment
#Suriya's son Dev got Black Belt holding in Karate
pic.twitter.com/QuxwWz3877
— AmuthaBharathi (@CinemaWithAB) April 21, 2024