மீண்டும் பாலிவுட்டில் சூர்யா.. பிரபல இயக்குனருடன் செம கூட்டணி..! கதை இதுதானா?

நடிகர் சூர்யா அடுத்து நடிக்க இருக்கும் பாலிவுட் படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் நடிப்பில் சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் ஆகிய திரைப்படங்கள்,…

WhatsApp Image 2023 06 13 at 3.59.18 PM

நடிகர் சூர்யா அடுத்து நடிக்க இருக்கும் பாலிவுட் படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் நடிப்பில் சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் ஆகிய திரைப்படங்கள், சமீபத்தில் வெளியாகி உள்ளன. சூரரைப் போற்று படத்தின் மூலம் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நடிகர் சூர்யா பெற்றார்.

கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ படத்தில் ரோலக்ஸ் எனும் பாத்திரத்தில் நடித்தும் ரசிகர்கள் மத்தியில் சமீபத்தில் வைரலானார். தற்போது சூர்யா, சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா திரைப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. முப்பரிமாண முறையில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் கங்குவா படம் 10 மொழிகளில் வெளியாக உள்ளது.

kANGUVA

இந்த படத்தில் கேமரா மேனாக வெற்றி பழனிச்சாமி பணிபுரிகிறார். கலை இயக்குனராக மிலன் பணிபுரிகிறார். வசனங்களை மதன் கார்க்கி எழுதி உள்ளார். இப்படத்தில் இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் பணிபுரிய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் சுந்தர் சண்டை காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். மிலன் கலை இயக்குனராக பணிபுரிகிறார். எடிட்டராக நிஷாத் யூசுப் பணிபுரிகிறார்.

d585dd74 e1c6 4f0f 9207 07fe3623c4ed

கங்குவா படத்தினை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்க உள்ளார். மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு புதிய படத்திலும் சூர்யா நடிக்க உள்ளார். இந்நிலையில் நடிகர் சூர்யா, பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ஓம் பிரகாஷ் மேஹ்ரா உடன் இணைந்து மகாபாரதத்தில் வரும் கர்ணன் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு புதிய இந்தி படத்தில் நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 13 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா பாலிவுட் படத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. கடைசியாக ராம் கோபால் வர்மா இயக்கத்தில் ‘ரத்த சரித்திரம் – 2’ படத்தில் சூர்யா நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.