விஜயகாந்துக்காக எழுதிய கதையில் நடித்து பெரிய ஹிட் கொடுத்த சூர்யா.. 10 வருஷம் கழிச்சு நடந்த அற்புதம்..

By Ajith V

Published:

விஜயகாந்தை மனதில் வைத்து எழுதிய கதையில் நடிகர் சூர்யா எப்படி சரியாக இருப்பார் என்று யோசித்தே பார்க்க முடியாத சூழ்நிலையில் அப்படி ஒரு படம் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய ஹிட்டாகி உள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா. அப்படி நடந்த ஒரு சம்பவத்தை பற்றி தான் தற்போது பார்க்க போகிறோம்.

தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக மட்டுமில்லாமல் நல்ல மனிதனாக விளங்கியவர் தான் விஜயகாந்த். படப்பிடிப்பின் போது தன்னை சுற்றி இருக்கும் அனைவரிடமும் மகிழ்ச்சியாக பழகும் விஜயகாந்த் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரிடமும் சமமாக பழகி வந்தார்.

பின்னாளில் அரசியலிலும் கலந்து பல்வேறு மக்கள் பணியாற்றி வந்த விஜயகாந்த், கடந்த டிசம்பர் மாதம் உடல்நலக் குறைவால் காலமானார். அவர் மறைந்தாலும் அவர் செய்த பல நலத்திட்ட பணிகள் என்றென்றைக்கும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படி இருக்கையில் கேப்டன் விஜயகாந்த்திற்காக எழுதப்பட்ட கதையில் சூர்யா நடித்து ஹிட் ஆன ஒரு திரைப்படம் உள்ளது. தமிழ் சினிமாவில் டாப் கமர்சியல் இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வருபவர் தான் கே எஸ் ரவிக்குமார். இவர் தற்போது பெரும்பாலும் நடிகராகவே நிறைய திரைப்படங்களிலும் தோன்றி வந்தாலும் அவரது இயக்கத்தில் உருவான படையப்பா, முத்து, பஞ்சதந்திரம், தசாவதாரம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்கள் எந்த காலத்திலும் ரசிகர்களால் மறந்து விட முடியாது.

அப்படிப்பட்ட ஒரு கமர்சியல் இயக்குனரான கே. எஸ். ரவிக்குமார், நடிகர் ரமேஷ் கண்ணாவை ஒருமுறை சந்தித்துள்ளார். அந்த சமயத்தில் அவரிடம் சூர்யா மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகியோர் தனக்கு தேதி கொடுத்ததாகவும் அவரை வைத்து படம் எடுக்க கதை எதுவும் செட் ஆகவில்லை என்றும் வேதனையுடன் கூறியுள்ளார் கே எஸ் ரவிக்குமார்.

அப்போது விளையாட்டாக அவரிடம் ரமேஷ் கண்ணா என்னிடம் ஒரு கதை இருக்கிறது நான் ஒன் லைன் சொல்லவா எனக் கேட்டுள்ளார். கே எஸ் ரவிக்குமாரும் விருப்பத்துடன் அந்த கதையை கேட்க, 10 ஆண்டுகளுக்கு முன்பு யோசித்த கதையை தான் ரமேஷ் கண்ணா விளக்கியுள்ளார். அப்போது முதல் பாதி கதை முடிந்ததுமே சூர்யாவுக்கு அழைத்து ரமேஷ் கண்ணா சிறப்பான கதையை வைத்திருப்பதாகவும் நாளை வந்து கேட்டுக்கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளார் கே. எஸ். ரவிக்குமார்.

அதன்படி மறுநாளில் ரமேஷ் கண்ணா, கேஎஸ் ரவிக்குமார், சூர்யா உள்ளிட்ட அனைவரும் இருந்துள்ளனர். அப்போது தன்னிடம் இருந்த கதையையும் ரமேஷ் அண்ணா விளக்கி உள்ளார். சூர்யா உள்ளிட்ட அனைவருக்குமே அந்த கதை பிடித்து போக அப்படித்தான் ஆதவன் திரைப்படம் உருவாகி இருந்தது.

மேலும் இந்த கதையை விஜயகாந்தை நினைத்து ரமேஷ் கண்ணா பத்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதி இருந்ததாகவும் பின்னர் அந்த கதை டேக் ஆப் ஆகாததால் கே. எஸ். ரவிக்குமார் கதை கேட்ட சமயத்தில் சொல்லி ஆதவன் என்ற சூர்யாவின் சூப்பர் ஹிட் திரைப்படமாகவும் மாறி இருந்தது குறிப்பிடத்தக்கது.