‘ப’வரிசையில் அந்தக் காலத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சூப்பர்ஹிட் படங்களாக வந்தன. பாலும் பழமும், படிக்காத மேதை, பார்த்தால் பசி தீரும் என சொல்லிக்கொண்டே போகலாம். அதே போல சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கும் பல படங்கள் ஹிட் அடித்துள்ளன. அவற்றைப் பற்றிப் பார்க்கலாமா…
படிக்காதவன்
1985ல் ராஜசேகர் இயக்கத்தில் ரஜினி, சிவாஜி இணைந்து நடித்த படம். அம்பிகா தான் ஜோடி. இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் சூப்பர். ஜெய்சங்கர், நாகேஷ், ஜனகராஜ், தேங்காய் சீனிவாசன், பூர்ணம் விஸ்வநாதன் உள்பட பலரும் நடித்துள்ளனர்.
பாட்ஷா
1995ல் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பிய ரஜினி படம் இதுதான். மாணிக்கமாகவும், பாட்ஷாவாகவும் என இரு மாறுபட்ட பாத்திரங்களில் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தார் ரஜினி. காட்சிக்குக் காட்சி கைதட்டல்கள் தான். பஞ்ச் வசனங்கள் தான். ஸ்டைல் தான். இதுவரை இப்படி ஒரு படத்தை ரசிகர்கள் பார்த்திருக்க மாட்டார்கள்.
ஆட்டோக்காரனாகவும், மும்பை தாதாவாகவும் வரும் ரஜினி அச்சு அசல் அந்தந்த கேரக்டராகவே மாறியிருப்பார். ரகுவரன் செம வில்லத்தனம் காட்டி அசத்தியிருப்பார். நக்மா தான் ஜோடி. பாடல்கள் அனைத்தும் முத்துக்கள். தேவாவின் இசை, சுரேஷ்கிருஷ்ணாவின் இயக்கம் படத்தை ஜெட் வேகத்தில் கொண்டு சென்றது.
படையப்பா
கே.எஸ்.ரவிகுமாரின் இயக்கத்தில் 1996ல் வெளியாகி சாதனை படைத்த படம். இது அப்போது வெளியான இந்தியன் படத்தின் வசூலை முறியடித்துள்ளது.
ரஜினி, சிவாஜி, மணிவண்ணன், ரம்யா, ராதா ரவி, சௌந்தர்யா, நாசர், மணிவண்ணன், வடிவுக்கரசி உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாடல்கள் செம. ரம்யா கிருஷ்ணன் நீலாம்பரியாக வந்து ரஜினிக்கே டப் கொடுத்து நடித்து இருப்பார்.
பொல்லாதவன்
1980ல் முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளியான படம். ரஜினி, லட்சுமி, ஸ்ரீபிரியா உள்பட பலர் நடித்துள்ளனர். எம்எஸ் விஸ்வநாதனின் இசையில் பாடல்கள் அருமை.
போக்கிரி ராஜா
1982ல் வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் சக்கை போடு போட்டது. ரஜினியைத் தூக்கி வைத்துக் கொண்டாடிய படம். எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் பஞ்சு அருணாசலம் கதையில் படத்தில் ரஜினியின் நடிப்பு சூப்பர். ஸ்ரீதேவி, ராதிகா, மனோரமா, முத்துராமன் உள்பட பலரும் நடித்துள்ளனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாடல்கள் சூப்பர் ரகங்கள்.