சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ்த் திரையுலகில் உச்ச நடிகராக இருந்தாலும் வீட்டிற்கு எப்போதுமே சிறந்த குடும்பத் தலைவனாகவும் விளங்கி வருகிறார். ஷுட்டிங் இல்லாத நாட்களில் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவழிப்பது, பேரக்குழந்தைகளுடன் விளையாடுவது என இன்றும் அதே எனர்ஜியுடன் வலம் வருகிறார். இந்நிலையில் கடைசியாக நடித்த ஜெயிலர் படத்தில் பேரனுடன் விளையாடிக் கொண்டே நடித்த ரத்தமாரே ரத்தமாரே பாடல் தாத்தாக்களின் அருமையை உணர்த்தியது. ஒவ்வொரு வீட்டிலும் இப்படி ஓர் தாத்தா கிடைக்கமாட்டார்களா என ஏங்க வைத்தார் சூப்பர் ஸ்டார்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டாரின் இரண்டாவது மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் இன்று காலை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு போஸ்ட் ஒன்றைப் பதிவிட அது தீயாய் இணையத்தில் வைரலாகி வருகிறது. வழக்கமாக பள்ளிக்கு பேரக்குழந்தைகளை தாத்தாக்கள் சென்று விடுவதும், அழைத்து வருவதும் இயல்பாக நடக்கும். ஆனால் அதுவே பிரபலங்களாக இருக்கும் போது அவர்களின் தனியுரிமைகள் மிகவும் பாதிக்கப்படும். இதனால் தாங்கள் வெளியே செல்லும் போது ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு அன்புத் தொல்லை கொடுப்பர். இதனால் அவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதை பெரும்பாலும் தவிர்த்து விடுவர்.
தனுஷின் ராயன் எப்படி இருக்கு? வெளியான டிவிட்டர் விமர்சனம்..
இந்நிலையில் இதையெல்லாம் பொருட்படுத்தாது ஒரு சிறந்த தாத்தாவாக தன் கடமையைச் செய்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. இன்று காலை சௌந்தர்யா ரஜினிகாந்தின் மகன் பள்ளிக்குச் செல்ல அடம்பிடித்ததால் அவரைச் சமாதானப்படுத்தி பள்ளிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். மேலும் பள்ளியின் வகுப்பறைக்கும் சென்ற ரஜினியை அங்குள்ள குழந்தைகள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். இதனை புகைப்படமாக எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் சௌந்தர்யா ரஜினிகாந்த். இதைப் பார்த்த இணையவாசிகள் ரஜினியின் இந்த லுக் மற்றும் செயல் குறித்து கமெண்டுகளை அள்ளித் தெளிக்கின்றனர்.