நெப்போலியனுக்குப் பதிலா வேற நடிகர் இல்லையா? தயக்கம் காட்டிய ரஜினி.. வல்லவராயனாக மிரட்டிய நெப்போலியன்..

By John A

Published:

இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் புது நெல்லு புதுநாத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகர் நெப்போலியன். கிராமத்து முரடன் வேடமா கூப்பிடு நெப்போலியனை என்னும் அளவிற்கு பல படங்களில் கிராமத்து ஹீரோ கதாபாத்திரத்தில் ஜொலித்தார். ஆனால் முதல்படத்தில் 60 வயது வேடம். அப்பொழுது அவருக்கு 28 வயது தான் ஆகியிருந்ததாம். குமரேசன் என்ற இயற்பெயரை பாரதிராஜா நெப்போலியன் என மாற்றினார்.

இதனைத் தொடர்ந்து வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்ட ஆரம்பித்தார் நெப்போலியன். நடிக்க வந்த சில படங்களிலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் படம் தான் எஜமான். ஏ.வி.எம். தயாரிப்பில், ஆர்.வி. உதயக்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ரஜினியுடன் மீனா, நெப்போலியன், கவுண்டமணி, செந்தில், ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

அப்போது கிராமத்துப் பண்ணையார் வேடங்கள் தமிழ் சினிமாவைப் புரட்டிப் போட அதில் ரஜினியும் மிஞ்சவில்லை. எனவே அப்படியான கிராமத்துப் பண்ணையார் கதாபாத்திரத்தில் நடித்து சூப்பர் ஹிட் ஆன படம் தான் எஜமான். இதேபோல் கமலுக்கு தேவர் மகன் அமைந்தது.

இளையராஜாவின் இசையில் பாடல்கள் இன்றும் கிராமத்து வீதிகளையும், பேருந்துகளையும், திருவிழாக்களையும் அலங்கரிததுக் கொண்டிருக்கிறது. வானவராயனாக ரஜினி நடிக்க, அவருக்குப் பங்காளியாக வில்லனாக வல்லவராயனாக நெப்போலியன் மிரட்டினார். கல்யாண வீடா இருந்தா நான்தான் மாப்பிள்ளையா இருக்கணும்.. இழவு வீடா இருந்தா நான்தான் பொனமா இருக்கணும் என பஞ்ச் வசனம் பேசி ரஜினியை மிரட்டுவார்.

இளையராஜாவை இசையமைக்க வைத்த 8 நிமிட வீடியோ.. ஜமா பட இயக்குநர் பாரி இளவழகனின் அனுபவம்

இந்தப் படத்தில் தனக்கு வில்லன் நெப்போலியன் என்றதும் ரஜினி முதலில் தயங்கினாராம். ஏனெனில் நெப்போலியன் அப்போதுதான் நடிக்க வந்திருந்தார். மேலும் ரஜினி இந்தக் கதாபாத்திரத்திற்கு ராதாரவி உள்ளிட்ட சீனியர் நடிகர்களைக் போடுமாறு ஆர்.வி.உதயக்குமாரிடம் கூற, அவரோ நெப்போலியனின் மேனரிஸத்தை உணர்த்தி இவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று ரஜினியை சம்மதிக்க வைத்திருக்கிறார். இப்படித்தான் வல்லவராயானாக நெப்போலியன் எஜமான் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.

இதேபோல் கமல்ஹாசனுடன் விருமாண்டி, தசாவதாரம் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார் நெப்போலியன்.