கோவிலின் கல்வெட்டில் இடம்பெற்ற வாலி பாடல்.. தாயைப் போற்றி எழுதிய பாடலுக்கு அங்கீகாரம்..

By John A

Published:

தமிழ் இலக்கியங்கள் பெரும்பாலும் நமக்குக் கிடைத்தவை கல்வெட்டுக்களிலும், ஓலைகளிலும் தான். இப்படி கல்வெட்டுக்களிலும், ஓலைகளிலும் கிடைத்த பாடல்கள் பல நூற்றாண்டுகளைத் தாண்டி நம்மிடையே இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இப்படி தமிழ் இலக்கியத்தின் பெருமையையும், வரலாற்றையும் பண்டைய காலங்களில் கல்வெட்டுக்களில் பொறித்து வைத்தது போல் இன்று தமிழ் சினிமா பாடல் ஒன்று கோவில் ஒன்றில் பதிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பாடல் வாலிபக் கவிஞர் வாலி எழுதியது. கண்ணதாசனுக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவில் பாடல்களில் உச்சம் தொட்டவர் வாலி. எந்தத் தலைமுறையாயினும் அவர்களுக்கு ஏற்றாற்போல் பாடல்கள் எழுதுவதில் வாலிக்கு நிகர் வாலி மட்டுமே. தமிழ் சினிமாவில் அதிக பாடல்களை எழுதிய கவிஞர் வாலி இளையராஜா இசையில் எழுதிய ஓர் ஹிட் பாடல் தான் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த மன்னன் படத்தில் அம்மா என்றழைக்காத பாடல்.

இது வெறும் பாடலாக மட்டுமே இல்லாமல் தாய்மையைப் போற்றி மகன் பாடுவதாக அமைந்திருக்கும். கே.ஜே.யேசுதாஸின் குரலில் எப்படி தினமும் சபரிமலை நடை திறக்கும் போதும் மூடப்படும் போதும் ஹரிவராசனம் பாடல் ஒலிக்கிறதோ அதேபோல் இந்தப் பாடலும் ஒரு கோவிலில் ஒலிக்கிறது.

வேட்டையன் படத்துல நான் நடிச்சேன்னு சொன்னதும் தனுஷ் சார் ஒரே வார்த்தை தான் சொன்னாரு… துஷாரா விஜயன் ஓபன் டாக் …

திருச்சி அருகே உள்ள ஐயப்பன் கோவில் ஒன்றில் அம்மா என்றழைக்காத பாடலானது தினமும் ஒலிக்கிறது. கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள இந்தப் பாடலை நாம் கேட்க வேண்டுமெனில் ஒரு ஸ்விட்சை ஆன் செய்தால் போதும். இந்தப் பாட்டில் மனமுருகி அன்னையைப் போற்றலாம்.

நம் தாய் நமக்குப் பாலூட்டி, வளர்த்து ஆளாக்கிய அழகிய நினைவுகளை கண்களை மூடி தியான நிலையில் இந்தப் பாட்டைக் கேட்கும் போது கண்முன் கொண்டு வந்து நிறுத்தும். இப்படிப்பட்ட மகத்துவம் வாய்ந்த பாடலை வாலி தான் எழுதிய மிகச்சிறந்த பாடல்களில் இதைக் குறிப்பிடுகிறார்.