சன்னி லியோனே பாலிவுட் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவராக இருந்துவருகிறார். இவர் 2004 ஆம் ஆண்டு தி கேர்ள் நெக்ட் டோர் என்னும் திரைப்படத்தின்மூலம் நடிகையான அறிமுகமானார்.
துவக்கத்தில் ஹாலிவுட் படங்களில் நடித்துவந்த இவருக்கு 2012 ஆம் ஆண்டு ஜிஸ்ம் 2 என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் வாய்ப்பு கிடைத்தது. சூட்டவுட் வித் வடல, ஜாக்பாட், ராகினி எம்எம்எஸ் 2, டின்னா அன்ட் லோலோ போன்ற பாலிவுட் படங்கள் இவருக்கு பெரிய வரவேற்பினைக் கொடுத்தன.

தமிழ் சினிமாவில் வடகறி படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார், பாலிவுட்டில் சினிமாவைவிட இவருக்கு அதிக வரவேற்பினைக் கொடுத்தது இந்தி பிக் பாஸ் 5 தான் ஆகும்.
இவர் 2011 ஆம் ஆண்டு டேனியல் வெபர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் நிஷா என்ற தென் ஆப்ரிக்க பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
இன்று தனது 39 வது பிறந்தநாளை லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவரது வீட்டில் கணவன் மற்றும் குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார். ரசிகர்கள் பலரும் இவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.