அந்த ஜாம்பவான் மதகஜராஜா பார்த்துட்டு ஒன்னு சொன்னாரு.. சுந்தர். சியை ஆனந்த கடலில் ஆழ்த்திய நபர்

விஷால் நடிப்பில் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு தயாரான மதகஜராஜா திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை சுந்தர். சி இயக்கியுள்ள நிலையில் விஜய் ஆண்டனி…

Sundar. c about Mathagaraja Movie

விஷால் நடிப்பில் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு தயாரான மதகஜராஜா திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை சுந்தர். சி இயக்கியுள்ள நிலையில் விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். இந்த 13 ஆண்டுகளில் சுந்தர். சி வேறு நிறைய திரைப்படங்களை இயக்கியிருக்க தற்போது ட்ரெண்டும் மாறிவிட்டது. இதனால் மதகஜராஜா திரைப்படம் இத்தனை ஆண்டுகளுக்கு பின்பு ரசிகர்கள் மனதில் இடம்பெறுமா என்பதும் பெரிய கேள்வியாக தான் உள்ளது.

அதே நேரத்தில் மதகஜராஜா திரைப்படத்தின் பாடல்கள் வெளியான சமயத்திலேயே பெரிய அளவில் ஹிட்டாகி போக, அந்த படத்தின் டிரைலரும் அதிக பாராட்டுகளை பெற்றிருந்தது. மதகஜராஜா திரைப்படத்தில் சுந்தர். சி இயக்கத்தில் விஷால் – சந்தானம் காம்போவில் காமெடி வொர்க் ஆகும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. என்ன தான் புதிய திரைப்படங்கள், திரைக்கதை என பல மாற்றங்கள் இந்த 13 ஆண்டுகளுக்குள் நடந்து விட்டாலும் அதையெல்லாம் தாண்டி மதகஜராஜா திரைப்படமும் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அவரு ரொம்ப பாராட்டுனாரு

இதனிடையே மதகஜராஜா திரைப்படத்தின் ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றிருந்தது. இதில் நடிகர் விஷால், இயக்குனர் சுந்தர். சி, விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அந்த சமயத்தில் அவர்கள் அனைவருமே மதகஜராஜா திரைப்படம் பற்றி நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது பேசிய சுந்தர். சி, “சில தினங்களுக்கு முன்பு எனது மதிப்பிற்குரிய திருப்பூர் சுப்பிரமணியம் இரவு 11:30 மணிக்கு மேல் என்னை அழைத்திருந்தார்.

சீக்கிரமாக தூங்கச் செல்லும் திருப்பூர் சுப்பிரமணியம், இந்த நேரத்தில் அழைத்ததும் எனக்கு பயமாக இருந்தது. அவரது அழைப்பை எடுத்து பேசிய போது, ‘மதகஜராஜா படத்தை பார்க்க தயாரிப்பாளர் என்னை அழைத்திருந்தார். இத்தனை ஆண்டுகள் கழித்து வருவதால் எப்படி இருக்கும் என்று கேள்வியுடன் தான் சென்று பார்த்தேன். ஆனால் படம் மிக அருமையாக வந்திருக்கிறது’ என அரைமணி நேரம் மதகஜராஜா பற்றி என்னிடம் பேசிக் கொண்டிருந்தார்.

பொங்கலுக்கு வரோம்

கடந்த 30 ஆண்டுகளாக எனது படத்தை ரிலீஸ் செய்து வரும் திருப்பூர் சுப்ரமணியம் இதுவரையிலும் படத்தின் பிசினஸ் பற்றி தான் என்னிடம் பேசுவார். படம் அதிகம் வசூல் செய்துள்ளது, சுமாராகத்தான் உள்ளது என்பதை பற்றி பேசும் சுப்பிரமணியம் போன்ற ஒரு ஜாம்பவான் முதல் முறையாக எனது படத்தை பற்றி பேசி சிறப்பாக உள்ளது எனக்கூறியது மிக மகிழ்ச்சியாக உள்ளது. அவர் இன்னும் என்ன பேசினார் என்பதை நான் உங்களிடம் சொல்லவில்லை.
Mathagajaraja event

ரிலீசுக்கு பின்னால் படம் சிறப்பாக இல்லை என்றால் அதை பார்த்துவிட்டு நீங்கள் என்னை கிண்டல் செய்வீர்கள். திருப்பூர் சுப்ரமணியமும் மற்ற சில தயாரிப்பாளர்களும் பார்த்துவிட்டு மதகஜராஜாவை ரிலீஸ் செய்ய முடிவு எடுத்ததால் பொங்கல் விருந்தாக நாங்கள் திரைக்கு வர உள்ளோம்” என சுந்தர். சி கூறியுள்ளார்.